நல் உலகம்
உன் மனதை மீட்ட இசை தைவை,🎻🎺
இசை மீட்ட நல் வீணை தேவை:
வீணை மீட்ட விரல் தேவை;
விரல் மீட்ட நல்ல உடல் தேவை;
உடல் மீட்ட உன்னிடம் உண்மை தேவை;
உனது உண்மை மீட்ட நல்ல மனம் தேவை;
நல்ல மனம் மீட்ட இசை தேவை🎻
இசை மீட்ட இனிய இதயம் தேவை;
நல் இதயம் மீட்ட இதமான தருணம் தேவை;
இதமான தருணம் மீட்ட நற் சுற்றம் தேவை;
நற் சுற்றம் மீட்ட நல் உலகம் தேவை;
இறைவன் படைத்த இவ்வுலகம் நல் உலகமே!
அதை அனுபவிப்பதும்,உணர்வதும் அவரவர்
எண்ணங்களே!