எது அழகு

மண்ணுக்கு உயிரழகு

மரத்துக்கு கிளையழகு

பெண்ணுக்கு கற்பழகு

ஆணுக்கு பணியழகு

நிலவுக்கு ஒளியழகு

கடலுக்கு அலையழகு

பிறப்புக்கு புகழலகு

உடலுக்கு ஆரோக்கியமழகு

பேச்சுக்கு உண்மையழகு

அரசனுக்கு நல்லாட்சியழகு

பகைவனுக்கு சூழ்ச்சியழகு

பசித்தவனுக்கு உணவழகு

மூளைக்கு நினைவழகு

வசதிக்கு நோயழகு

வாழ்க்கைக்கு பிரச்சனையழகு

மருத்துவனுக்கு பிணியழகு

அவரவர் மனதிகேற்ப

அழகினில் பிரிவுண்டு

மழலையின் சிரிப்பொன்றே

உண்மையில் ஓரழகு

எழுதியவர் : கே.எஸ்.கோனேஸ்வரன் (6-Feb-18, 10:30 am)
பார்வை : 135

மேலே