தலையணை
வெடித்த பஞ்சு விடுதலையாகி
மீண்டும் சிறைபடுகிறது தலையனையில்
உழன்ற தலையினில் அமைதியில்லை
உறக்கம் தருகிறது ஓரணையாய்
பிறரின் சுகத்திற்கு நசுக்கப்படுவதால்
அதுவும் ஒரு பாட்டாளி
ஜனனத்தின் சாட்சியாய் நிற்கிறது
மரணத்தின் சாட்சியாய் நிற்கிறது
காதலுக்கும் சாட்சியாய் நிற்கிறது
காமகொடுரத்திற்கும் சாட்சியாய் நிற்கிறது
இதன் மந்திரத்தால் மாமியார்கள்
திக்குமுக்காடிப் போகிறார்கள் தெரியுமா
அவர்களும் மாமியார்களாய் இருந்தபோது
அதைத்தான் செய்தது பாரபட்சமின்றி
மானுட ஜென்மத்தின் மொத்த
கவலைகளை எல்லாம் சுமக்கிறது
கெட்ட எண்ணங்களையும் சுமக்கிறது
வக்கீல்கள் வாதாடுவது போல
அது தலையணையின் தொழில்தர்மம்
பெண்ணுக்குள் தேங்கி நிற்கும்
சுதந்திரம் விடுதலைபெற துடிப்பதுபோல
பிதுங்கி பிதுங்கி சாகிறது
ஒவ்வொரு இரவும் பகலும்