இளமை

இனிமை காலமிது

இளமை காலமது

அனுமதி அவசியமில்லை

வெகுமதி தேவையில்லை

இரத்த கொதிப்பு

மருந்தும் தேவையில்லை

இன்பத்தின் தேடல்

துன்பமும் தெரியவில்லை

புத்திமதி தேவையில்லை

சக்தியது குறைவுமில்லை

பக்தியது தேவையில்லை

முக்தியது அறியவில்லை

பார்த்ததெல்லாம் அழகுகலை

படைத்தவனை அறியவில்லை

சொந்தமது தேவையில்லை

சுற்றமது தெரியவில்லை

பசித்தவுடன் பாவமில்லை

செரித்தநேரம் தெரியவிலை

பசுங்கிளிகள் பறந்துவரும்

உன்கிளையில் அமர்ந்துவிடும்

இனியமொழி கேட்டிடுவாய்

இன்பங்களை துய்த்திடுவாய்

கனிகளது தீர்ந்தவுடன்

பறந்திடுமே பசுங்கிளிகள்

காலமது வந்துவிடும்

இரத்தமது சுண்டிவிடும்

நரம்புமது தளர்ந்துவிடும்

காலமது முடிவதற்குள்

இளமையதை ருசித்திடுவாய்

இன்பக்கடல் நீந்திடுவாய்

எழுதியவர் : கே.எஸ்.கோணேஸ்வரன் (6-Feb-18, 1:08 pm)
பார்வை : 111

மேலே