அணுவும் நம் காதலும்
அணுவைப் பிரித்து
அணு, அணுவாய் சிதைத்தாலும்
அனுவின் பிரிவில் கிடைப்பது
மாபெரும் சக்தி
காக்கவும் மாய்க்கவும்
பயன்பெறும் சக்தி
என்னை வீணே சீண்டி
என் மனதை உடைத்தாயென்றால்
அதில் வரும் சக்தி தருமே
வீணே நம் காதலுக்கழிவு
இதனை அறிந்திடுவாய் எனில்
நம் காதலில் என்றும் பொலிவே