மூர்ச்சையற்ற பொழுதுகள் பகுதி 6

மூர்ச்சையற்ற பொழுதுகள்_௬

இருபாலரும் சேர்ந்து படிக்கும் வகுப்பு என்பதால் ரொம்ப படிக்க தெரியாவிட்டாலும்,கொஞ்சமேனும் படிக்கிற மாதிரி நடிக்கவாவது தெரிஞ்சு இருக்கனும்.
அந்த பிம்பத்தை கார்த்திக்கும் கட்டமைத்து இருந்திருந்தான்.
மற்ற பாடங்களை விட அறிவியல் பாடத்தில் மட்டும் அவனக்கு தனி ஆர்வ கோளாறு தாறுமாறா இருக்கும்.
ஏனென்றால் அந்த பாடத்திலிருந்து வாரம் ஒருமுறை குவிஸ் போட்டி வைப்பார்.அதோடு மற்ற வாத்தியார்களை விட மாணவ மாணவிகளுடன் சகஜமாய் பேசுவார்.இப்படி எதாச்சும் கேள்வி கேட்டு நமக்கு தெரியாமல் பெஞ்சு மேல ஏறி நின்றால் பொண்ணுங்க மத்தியில மானம் நூலாம்படையில் தூக்கு போட்டுகிட்டது மாதிரி இருக்கும்.
இந்த அவமானம் தேவையா..
அதனாலயே அந்த புத்தகத்தை கொஞ்சம் அதிகமாகவே வாசித்து வைப்பான்.
அன்று ஒரு நாள் அப்படிதான் ஒரு குவிஸ் போட்டி,புத்தகத்தில் இருந்து எந்த கேள்வி வேண்டுமானாலும் கேட்கலாம்.பதில் தெரியாதவங்களை கேள்வி கேட்டவர் தலையில் குட்ட வேண்டும்.
இதுதான் விதி(முறை).
கார்த்திக் கேள்வி கேட்பதற்கான வாய்ப்பும் வந்தது.அவனோட நேரத்துக்குனு மாலதிதான் வந்து மாட்டினாள்.
உலோகங்களின் அறிவியல் குறியீடு பகுதியில் இருந்து வெள்ளீயத்தின் அறிவியல் குறியீடு என்னவென்று கேட்டான்...
நல்லா படிக்குற புள்ளதான் அன்னைக்குனு பார்த்து ஓவரா படிச்சிருச்சு போல யோசிக்காமல் படார்னு பதிலை சொல்லிருச்சு..
எல்லோரையும் விட அவனே அதிகமாய் அதிர்ச்சி அடைந்திருந்தான்.
ஏனென்றால் வெள்ளீயம் பற்றி கேள்வி கேட்டால் வெள்ளியின் (சில்வர்) அறிவி(L) குறியீட்டை சொல்லி பல்பு வாங்கியது..
அப்புறம் என்ன?
தவறான பதிலுக்கு தண்டனையாய் தலையில குட்ட வேண்டும்..
எல்லோருக்கும் அப்படி ஒரு வாய்ப்பு கிடைப்பதில்லை.
அவள் இந்த நாளை மறக்க முடியாத நாளாய் இருக்க வேண்டும்.
அவளின் உள்ளம் பதற்றத்தின் பிடியில் மாட்டி கொண்டு உடல்களில் உதறல் கண்கள் வழியாய் வெளியேற துடித்து கொண்டிருந்தது.
அவனும் விரல்களை மடக்கி தலையில் உள்ள எண்ணெய்யில் தடவி கொண்டு அருகில் சென்றான்.
பச்சை கலர் பட்டு சட்டை போட்டு பச்ச பசலையின் விழிகள் வேதனையில் வேர்த்து கொட்ட,தலை குனிந்து இருந்தாள்...

அவனும் எல்லோருக்கும் தெரியுமாறு சப்தமாய் குட்டினான்.
அவளை விட அவன் கைகள்தான் அதிகமாய் வலித்திருக்கும்.
ஆம் அவளை குட்ட மனதில் தைரியம் இல்லாததால் பின் வாங்கி விட்டதால்,
மேஜையில் பத்து குட்டு போடனும்.அதுதான் அவனுக்கு தண்டனை..
மீண்டும் அவனது இருகையில் அமர திரும்பிய போது, அவளது சுவாசத்தின் பெருமூச்சு கதகதப்பு அவனுக்குள் தீயின் வெப்பத்தை சில விநாடிகள் உணர்த்தி சென்றது.
கண்களால் ஏதோ வார்த்தை சொல்ல,
அவனுக்கு புரியாததால் மௌனத்தால் ஏதோ குறியீடாய் உணர்த்தினாள்.
அன்று அவள் தலையில் குட்ட மறுத்ததால்தானோ பின்னாளில் அவன் இதயத்தில் ஆயிரம் தேனீகள் கொட்டிய வலியை கொடுத்து விட்டு சென்றாள். .
அதே மௌனத்தின் குறியீடு கொண்டு..
மௌனம் காதல் சம்மதத்தின் குறியீடா இல்லை சவக்குழியின் பதிலீடா என்பது தெரியாமல் நின்றான்.
அதை தெரிந்து கொள்ள அவளே வாய்ப்புகளை கொடுத்தாள்.

அந்த நாள் முதுகின் பின்னால் மூச்சிரைக்க்க துரத்திக்கொண்டு ஓடி வந்ததா அல்லாது மூச்சிழந்து நின்றதா என்பதை நாளை தொடரும்....

எழுதியவர் : சையது சேக் (6-Feb-18, 6:54 pm)
பார்வை : 188

மேலே