முதுமொழிக் காஞ்சி 19
குறள் வெண்செந்துறை
ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம்
அறிவுசோர் வுடைமையிற் பிறிதுசோர்வும் அறிப. 9
அறிவுப்பத்து, முதுமொழிக் காஞ்சி
பொருளுரை:
ஒருவன் தன்னறிவில் தெளிவில்லாதவன் என்றால், அவனது மற்ற எல்லாவித அறிவுக் குறைபாடும் தடுமாற்றமும் அறியப்படும்.
பதவுரை:
அறிவு சோர்வு உடைமையின் - ஒருவன் அறிவு தளர்ச்சியுடையனா யிருத்தலால்,
பிறிது சோர்வும் - அவனிடத்துள்ள ஏனையத் தளர்ச்சிகளையும், அறிப - அறிவர்.
கருத்து:
ஒருவன் பலவகைத் தளர்ச்சிகளையும் உடையவன் என்பதற்கு அவனுடைய அறிவின் தளர்ச்சியே அறிகுறி: