தமிழன் நாடாளும் நாள்
மக்களால் மக்களுக்காக மக்கள் நடத்தும் ஆட்சி அது
பொய்யாய் போச்சி
மக்களை வாட்டி வதைக்கும் ஆட்சி
இன்றுய மக்களாட்சியாய் ஆச்சு/
வேலை செய்பவனுக்கு
வேலை கொடு
வேலை செய்யாதவனுக்கு
ஊதியம் கொடு
இந்த பழமொழி
நூறு சதவிகிதம்
பொருந்தி போகிறது
தற்பொழு நாட்டின் நிலை
இப்படி தான் சென்று கொண்டிருக்கிறது/
எல்லா வசதி உள்ளவர்களுக்கு
ஊதிய உயர்வு
எதுவும் இல்லாத
ஏழைகளுக்கு கட்டண உயர்வு/
உயிரை காக்கும் மருத்துவம்
உழைப்பை தரும் கல்வி
இப்படி எல்லாமும் வியாபாரம்/
வரி மேல் வரி போட்டு
வசூலிக்குது நாடு
வரிசையில் நின்று
புலம்புகிறான் அவன் வசிக்க
எங்கே வீடு/
ஆளப்போரான் தமிழன் என்று
பாடல் வரிகளில்
கவிதை மிளிர்கிறது
அது நனவாகின்ற
காலம் தான் எப்போது/
தமிழன் நாடாள வேண்டும்
நாட்டிலுள்ள துறைகளிலெல்லாம்
அவன் பெயர்
பொறிக்க வேண்டும்........
அன்று நான் ஒரு தமிழன் என்று
ஒவ்வொரு குடிமகனும்
பெருமை கொள்ள வேண்டும்.....
அந்த நாள் விரைவில்
கண்முன் தோன்ற வேண்டும்......