சொல்லி தீருமா

உன்னை அடையாளம் கொண்ட நாளிலிருந்து
என் காதல் மோகம்
உன்னை
அடையாளம் கொண்டிருக்கிறது.
பள்ளி முதல் கல்லூரி காலம் வரை

கண்டதும் கனவாகி காண்பதும் உன் முகமாகி
கனவாக கண்டதும் நிஜமாக நடப்பதும்
என் வாழ்வில் புதிதாக தோன்றியது

உன் உடல் அழகை கண்டே உன் மன அழகை
கைப்பற்றிய கள்வன் நான்

உணர தானே முடியும் என்ற காதலை
நீயும்! நானும்
எப்படி பரிமாறி கொண்டோம்
பரிமாற்றங்கள் பல மாற்றங்களை கொண்டே
நம் காதல் உருவெடுத்தது

நம்முள் காதல், காமம், ஆசை, பாசம், கோபம்
என
எல்லாவற்றையும்
தினம் தினம்
நான்
உனக்கு அர்ப்பணிப்பேன்
உன் காதலனாய்.....

என்றும் அன்புடன் நாகங்குடி க.தி.வெங்கட்கோபி

எழுதியவர் : க.தி.வெங்கட்கோபி (9-Feb-18, 12:14 am)
சேர்த்தது : Gobi
Tanglish : solli theeruma
பார்வை : 178

மேலே