தேடுகிறேன்

காலம் பதில் சொல்லாமல் பல உண்மைகள் புரியாது...

இடைவெளி ஏன் என்பதற்கு தெரியாது என்பதே பதில்...

மறைந்தே இருக்கும் அன்பிற்கு என்ன பலன் என புரியவில்லை...

தேவைகள் மட்டுமே உறவின் அடிப்படை என்பது விளங்க மறுக்கிறது...

நட்பு உறவுகளைவிட மேல் எனில் ஏன் நண்பர்கள் பிரிகிறார்கள்...

காதலுக்கு நுழைவுவாயில் காமம் அல்ல...

நம்பிக்கைக்கும், நம்பிக்கொண்டு இருப்பதற்கும் வித்தியாசம் அதிகம்...

எழுதியவர் : ஜான் (9-Feb-18, 10:25 am)
Tanglish : thedukiren
பார்வை : 99

சிறந்த கவிதைகள்

மேலே