பிரிவிற்கு பின்

நெடுநாள் பிரிவுக்குப் பின் உன் முகம் பார்க்கிறேன்😊
மனதுக்குள் இனம் புரியாஅதிர்வுடன்
சந்தோஷம் மே மாத இரயிலாய்
நிரம்பி வழிகிறது😊
அழுது அடம் பிடித்த குழந்தை கையில் பொம்மை கிடைத்து சிரித்தது போல மனம் குதூகலிக்கிறது😊
குதிர்ந்து நாளாகிப் போன முதிர்
கன்னிக்கு மணாளன் கிடைத்தது போல மனம் குதித்தாடுது😊
ஆலையிட்ட கரும்பின் சக்கையாக
இருந்த நான் உனைப் பார்த்ததும்
வெல்லமாய் ஆகிப் போனேன்😊
இனி நான் உனைப் பார்த்து கொண்டே இருக்க வேண்டும்😊
நாம் இன்ப வேதனையில் சிக்கி தவிக்க வேண்டும்💐💐💐💐

எழுதியவர் : பாலமுருகன் பாபு (9-Feb-18, 6:49 am)
சேர்த்தது : BABUSHOBHA
பார்வை : 111

மேலே