அவள்????

அவளுக்கு தெரியாது
அந்திச்சாமும் இரவுக்குறியும்
பகல்குறியும் ......
காலத்தால் களைத்துப்
போனவள் .....
காயக்குறியும் அறியா ...
அறிந்தது ஒற்றைக் குறி
மட்டுமே......
அதுவே அவள்
நல்வாழ்க்கையை
கேள்விக்குறியாக்கியது ....
காமக்குறிப்பாய் ஒடுக்கப்பட்ட
நெஞ்சாங்கூட்டு மனசு
எங்கோ நசுங்கி கிடக்கிறது
பல நூறு ஆயிரத்திற்காக
பாவிகளின் பசியை கழுவி
வயிற்றை நிரப்பும்
விலைமகளாக தள்ளிய சமுதாயம் .........
இதற்க்கு யார் காரணம்?????

ரம்யா கார்த்திகேயன்

எழுதியவர் : ரம்யா கார்த்திகேயன் (9-Feb-18, 1:54 pm)
பார்வை : 79

மேலே