தமிழினமே எழுந்து வா

தமிழா...
வேர்ச்சொல்கொண்டு
வார்த்தை சமைத்தோம்
இன்று...
நம் மொழியால் இணைந்து
புரட்சி விதைப்போம்...

தீண்டத்தகாதது
சாதி மதம் மட்டுமே
மனிதர்கள் அல்ல...

சாதிக்கு தலைவணங்குவான்
மதத்திற்க்குள் விலைபோவான்
எதிரி அவனே!
முதலில் அவனைக் களையெடு...

போர்க்களம் வேண்டாம்
கையில் ஆயுதம் வேண்டாம்
மனக்களத்தில் ஒன்றிணைந்திடு

ஒற்றுமைக்கு வித்தே
தனிமனித மாற்றம்தான்!

அடக்குமுறைக்கு
அரசு வக்காலத்து வாங்கும்
அராஜகத்திற்க்கு
ஆதாரமில்லாமல் கைகொடுக்கும்

உனக்கு மட்டும்
அஹிம்சையின்
பச்சை சிரிப்பை உதிர்ப்பார்
காந்தி..!

வடக்கே கொன்றால் இந்தியன்!
தெற்க்கே கொன்றால் தமிழன்!

உயிரைக் குடித்தது தோட்டாக்கள்
விசையை சொடுக்கியவன் யார்?
இதில்தான் பொங்கியெழும்
தேசப்பற்று

உன் நிலையென்ன
நீயே அறிந்து கொள்!

ஊடகத்திற்க்குள்
ஊர் சுற்றாதே
உண்மை உன்னை வந்தடையாது

பாதளம்வரை
நீயும் அறிவாய்
பகுத்தறிவிற்க்கு வழிவிட்டால்!

நடிப்பிற்க்குள்
நொடித்துப் போகாதே
அவன் நடிகன் மட்டுமே

பழமைக்கு பணிந்துவிடாதே
உன் வரலாற்றின் தொடக்கம்
அதற்க்கு முன்பிருந்தே

இங்கு
ஆள்பவனுக்கு திராணியில்லை
ஆண்டவர்க்கு
எதிர்காலக் கவலையில்லை
அடிமையாய்போனது...
இம்மண்ணின் மைந்தர்களே!

இப்பொழுதே விழித்துக்கொள்!
உன்னையாள நீ மட்டுமே
தகுதியானவன்!

அரியணை ஏறிவிடு
இல்லையேள்...
நாளை நீயும் அகதியாவாய்!

மெய்ஞ்ஞானம் தொட்டு
விஞ்ஞானம் வரை
இவ்வுலகிற்க்கு நாமளித்ததே!

உன் இலக்கியத்திற்க்கு
மதிப்புக்கொடு...
நவீன விஞ்ஞானம்
தமிழுக்கு தலைவணங்கும்
அப்போது மார்தட்டிச் சொல்
தமிழே என் தாய்மொழியென..!

எழுதியவர் : -யாழ்வேந்தன் (10-Feb-18, 8:18 am)
பார்வை : 202

மேலே