அசோக_சக்ரா

#அசோக_சக்ரா
அன்றைய நாள் அவனின் வாழ்நாளில் மறக்க முடியாத தருணம்,"இருக்காதா பின்ன தன் வாழ்க்கையின் லட்சியத்தை அடைந்த தினம்"..இதற்காக தனது இளமை பருவம் முழுவதையும் செலவிட்டான்,மற்ற இளைஞர்கள் போல் அல்லாமல் தனக்கென ஒரு பாதை,
தினமும் அதிகாலை 5 மணிக்கெல்லாம் உடற்பயிற்சி,யோகா,தியானம் என ஒரு அட்டவணை போல தனது இளமை பருவத்தை கடந்தான்,இது மாலையும் தொடரும்..பீடி,சிகரெட், பான் மசாலா போன்ற
பழக்கங்கள் ஏதும் இல்லை, ஏனென்றால்; இது தனது
இலட்சியதுக்கு தடையாக இருக்க கூடாது என்பதற்காக...

"தனது குடும்பத்தில் உள்ளவர்கள் கூட யாரும் இப்படி இருந்ததில்லை.இவன் மட்டும் ஏன் இப்படி இருக்கான் என ஊர் மக்கள் பேசுவது இவன் காதிலும் விழும்"..
ஆமாம், இவனுடைய குடும்பத்தில் யாரும் இப்படி இல்லை,இவனுக்கு இந்த எண்ணம் தோன்ற காரணம்,
ஜெனரல் கேப்டன் வீர் சிங்..அவர் ஒரு மாவீரர் கார்கில் போரில் பங்கு கொண்டவர்,பின்னர் தான் ஓய்வு பெற்ற பிறகு தனது ஊர் இளைஞர்களை ராணுவத்திற்காக தயார் செய்து இந்திய நாட்டிற்காக அனுப்பி கொண்டு இருந்தார்..
இதனை சிறு வயதிலிருந்து கவனித்து வந்தான் இவன்,
கேப்டன் இப்போது உயிரோடு இல்லை என்றாலும் அவர்
சொன்ன வார்த்தைகள் பசுமரத்தானி போல அவன் மனதில் நின்றது..அவன் பெரிதாக ஒன்றும் படிக்கவில்லை, பிளஸ் 2 வரை தான் படிப்பு,மற்ற நேரம் முழுவதும் தனது நோக்கம் இந்திய ராணுவத்தில் சேர்வது
தான்அது சாத்திய மாகும் என்பது அவனின் நம்பிக்கை...

அவனது நம்பிக்கை வீண் போகவில்லை,பல்வேறு எழுத்து தேர்வு,உடல் தகுதி,மருத்துவ பரிசோதனை,நேர்முக தேர்வு எல்லாவற்றிலும் தேர்வானான்,ஒரு வழியாக இந்திய ராணுவத்தில் சோல்ஜர் ஆக நுழைந்தான்,"அவன் மகிழ்ச்சியில் திகைத்தான்", அவனுடைய பெற்றோர்கள் தன் பிள்ளையை நினைத்து பெருமை பட்டனர், சில ஊர் முக்கியஸ்தர்கள் பொறாமை பட்டனர், பெரும்பாலான ஊர் மக்கள் வெடி வைத்து திருவிழா போல் கொண்டாடினர், கொண்டாட்டம் ஒரு புறம் போக, மறுபுறம் குடும்பம் சோகத்தில் மூழ்கியது..

அதற்கு காரணம் "இன்னும் 5 நாள்ல டூட்டில ஜாய்ன் பண்ணனுமா, டூட்டி காஷ்மீர் பார்டர்லயாம்"என்று அவரின் உறவினர்கள் பேசி கொண்டு இருந்தனர்..5 நாட்கள் கழித்து ஒருவழியாய் காஷ்மீர் ராணுவ முகாமிற்கு சென்றான்..முதல் 15 நாட்களுக்கு பயிற்சி, தாக்குதல், தற்காப்பு முறைகள் , டிபென்ஸ் போர்ஸ்,
ஆயுதங்களை கையாளும் விதம், போன்றவை சொல்லி
தந்தார்கள்.."அன்று தான் அவன் தவம் கிடந்த இளமைக்கு கிடைத்த வெற்றி, ஆகஸ்ட் 13 ஒரு ராணுவ வீரனாய் மிடுக்கோடு, யூனிபார்ம் அணிந்து ஆயுதத்துடன் டீபென்ஸ் போர்சில் ரோந்து பணியை மேற்கொண்டான்,
அவனுக்கே அவனை நினைத்து பெருமையாய் இருந்தது..
அதிகாலை சரியாக 6 மணி இருக்கும், பனி மூட்டம் நிறைய இருந்தது, அப்போது யாரும் எதிர்பார்க்கவில்லை,
அந்நிய ராணுவ படை நம் நாட்டில் ஊடுருவி சுதந்திர தினத்தை சீர்குலைக்க வந்து கொண்டு இருந்தது..

"எச்சரிக்கை மணி ஒலித்தது, அனைவரும் பரப்பரப்பாய்,
இருந்தனர், "பீ அலர்ட்"என்று ஒரு வீரன் இவனின் தோளில் தட்டி சொன்னான், அனைவரும் சேர்ந்து தாக்க தயாரானார்கள், முதல் அடி அவர்களுடையதாய் இருந்தது.. டிபென்ஸ் போர்ஸ் சுட்டுக்கொண்டு முன்னேறியது, அவனும் சுட்டு கொண்டே முன்னேறினான்,"திடீரென்று எதிர் பாராமல் அவர்கள் கீழ் பகுதியில் இருந்து தாக்கினர், அனைவரும் நிலை தடுமாறினர், இவன் ஒரு மரத்தின் பின் ஒழிந்து கொண்டு
கொண்டு தாக்கினான், இரண்டு அந்நியர்களை சுட்டு வீழ்த்தினான், பெருமிதம் கொண்டான்..பின்னர் சுட்டுக்கொண்டு முன்னேறினான்..

" சிறுது நேரம் போர்க்களம் அமைதி பூண்டது", யார் யார் எங்கு இருக்கிறார்கள், என்று தெரியவில்லை;இவன் கிழக்கு பக்கம் செல்ல முற்பட்டான்.. இரண்டு அடி கூட எடுத்து வைத்திருக்க மாட்டான், ஒரு குண்டு சத்தம் கேட்டது,
அனைவரும் நிலை தடுமாறினர், இந்திய ராணுவத்தினர் சப்தம் கேட்ட பகுதிக்கு விரைந்தனர், அங்கு அவன் கிடந்தான் தரையோடு, ரத்தம் வழிந்தோடியது, கேப்டன் மற்றும் சக வீரர்கள் தங்களது தொப்பியை தலையில் இருந்து எடுத்தனர்..

"அன்றுஆகஸ்ட் 15 சுதந்திர தினம், டெல்லியில் அவனுடைய அப்பாவும், அம்மாவும் ஒரு துணியால் தங்கள் கண்களில் வரும் கண்ணீரை துடைத்துக்கொண்டு
மேடை ஏறினர், அங்கு "அசோக சக்ரா" விருது வழங்குவதற்காக கம்பீரமாக அவனுடைய பெயர் வாசிக்க படுகிறது,
"அர்ஜுன் வர்மா"..

எழுதியவர் : முகம்மது முஃ பாரிஸ்.மு (10-Feb-18, 8:54 am)
பார்வை : 80

மேலே