பாலஸ்தீன்

#பாலஸ்தீன்
அன்று அதிகாலை நேரம் தொழுகைக்காக பாங்கு சொல்லப்படுகிறது,அம்மா அமீனையும், ஜாபரையும் எழுப்பிவிட்டார்,இவர்கள் இருவரும் துரு துரு சிறுவர்கள் வயது 8 லிருந்து 10 குள்ளாக இருக்கும் ,மழலை பள்ளியில் படித்து வருகின்றனர்,தனது தாயார் மற்றும் தங்கை கதீஜா(ஒன்றரை வயது)உடன் பாலஸ்தீன நகரில் வசித்து வருகின்றனர். தந்தை,கதீஜா பிறப்பதர்கு 4 மாதங்களுக்கு முன்னர் துபாயில் கட்டட வேலை செய்யும் போது தவறி விழுந்து வபாதனார், அந்த சோகம் மறைய கூட அவகாசம் இல்லாமல் ஓர் கோர சம்பவம்,தொழுகைக்காக அமீனும், ஜாபாரும் கடும் குளிரில் கை கட்டிய படியே பள்ளி நோக்கி சென்றனர். இகாமத் சொல்லப்படுகிறது அவசர அவசர மாக ஒழு செய்து விட்டு சப்பில் போய் நின்றனர்,அல்லாஹ் அக்பர், என்று இமாம் சொன்னவுடன் அனைவரும் தக்பீர் கட்டினர், சூரத்துல் அல் பாதிகா ஒதப்பட்டது,திடீரென ஒரு பெரும் சப்தம் காதை பிளந்தது, ஏதோ இடி தலை மேல் விழுந்தது போல வெளியில் பெண்கள்,குழந்தைகள் அலறல் சப்தம் கேட்டது,தொழுகை தொடர்ந்து நடக்கையில் சிறிய சூராக்களை ஓதி இமாம் தொழுகையை விரைவாக முடித்தார்.அனைவரும் தெருவை நோக்கி ஓடினர்,அமீனும்,ஜாபாரும் கூட்டத்தின் கூடவே ஓடினர், பள்ளி அமைந்திருக்கும் தெருவின் கடையில் புகை மண்டலமாகவும் தீ சுடர் விட்டு பறந்து கொண்டு இருந்தது,அனைவரும் , யா அல்லாஹ் என்று கூறி கொண்டு அவ்விடத்தை நோக்கி,ஓடலாகினர்.அங்கு ஒரு கோரம் கட்டடத்தின் சுவர்கள் பிளந்து, இடிந்து கிடந்தது,அழுகை சத்தம் நிறையவே கேட்டது,அனைவரும் ரத்தம் வழிந்தோட கூடிய நிலமையில் காணப்பட்டனர்,சிறுவர்களுக்கு என்ன நடக்கிறது,என் இந்த இடம் இப்படி ஆனது என்று புரியவில்லை,அதற்குள் ஒரு கூக்குரல் என்ன காப்பத்துங்க,காப்பத்துங்க என்று அமீன் தான் நிற்கும் செங் கற்களின் கீழ் பார்த்தான் ஒரு கை மேலே ரத்தம் வழிய கண்டனர்,உடனே கற்களை தாம் கைகளால் தூக்கி அந்த பெண்மணியை அதிலிருந்து மீட்டனர்,அவருக்கு தண்ணீர் தேவைப்படுகிறது,என்பதை உணர்ந்த ஜாபார் அருகில் இருக்கும் பள்ளிக்கு ஓடோடிச்சென்று ஒரு கோப்பையில் தண்ணீர் கொண்டு வந்தான்.வேறு ஏதாவது தேவைபடுகிறதா என்றுகேட்டான்,அமீன்.போதும் அல்ஹம்துலில்லாஹ் என்றால் அந்த பெண்மணி, தன் அம்மாவை போல ஒரு பெண் என்று தோன்றியது நினைவில்,அம்மா!அம்மா! நம் தங்கை கதீஜா என்னவாயிற்று என்று தெரியவில்லையே நினைவு வந்த வர்களாய் தங்களின் தெருவை நோக்கி அமீனும்,ஜாபாரும் ஓடினர்,அங்கே ,சூழல் சரி இல்லை என்பதை ஆம்புலன்ஸ் ஒலியும், போலிஸ் வாகன சைலர்னும், உணர்த்தின,வீடு அமைந்திருந்த கட்டடத்தை பார்த்தனர்,பேரதிர்ச்சி இடம் தரையோடு தரையாக காணப்பட்டதுடன் சிமெண்ட் புகைகளினால் சரியான பார்வையும் அவர்களுக்கு புலப்படவில்லை,அமீன்,ஜாபார் கண்களிலும் தங்களை அறியாமல் கண்ணீர் கொட்டியது,அமீன் கொஞ்சம் தன்னை திடப்படுத்தி கொண்டவனாய் சிமெண்ட் கற்களின் மேல் நடந்தான்,ஜாபாரும் தன் மெல்லிய அழுகை சத்தத்துடனே அவனை பின்தொடர,சற்றுத்தூரம் சென்ற உடன் அமீனின் காலில் ஏதோ,சிக்குண்டது;கீழே பார்த்தால் அது ஒரு ஹிஜாப் துணி(இஸ்லாமிய பெண்கள் தங்களின் தலைப்பகுதியில் அணியும் உடுப்பு)அது ஏதோ கற்களின் நடுவில் சிக்குண்டது போல இருந்தது,அழுகை இருவருக்கும் தொண்டையை அடைத்தது.ஜாபார் அழ தொடங்கிவிட்டான்,அமீன் தன் கைகளால்இழுக்க தொடங்கினான்;,அப்போது பின்னால் இருந்து யாரோ ஒருவர்,இருவர்களின் மீதும் தொட்டார்,அதிர்ச்சியுடன் அமீனும்,ஜாபாரும் திடுக்கிட்டு திரும்பினர்,அவர் தன் உடலோடு இருவரையும் அணைத்துக்கொண்டார்,ஜாபார் தன் விம்மிய குரலால் சொன்னான் அம்மா...

எழுதியவர் : முகம்மது முஃ பாரிஸ்.மு (9-Feb-18, 8:31 pm)
பார்வை : 106

மேலே