தாயின் இறப்பு
திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரு சிறிய வீட்டில் அப்பா, அம்மா, மகன்கள் இருவரும் வாழ்ந்து வந்தார்கள்
அதில் இரண்டு மகன்களும் இரட்டையர்கள் அப்பா கூலி வேலை பார்த்து அதில் வரும் வருமானத்தில் குடும்பத்தை நடத்தி வந்தார்கள்,
அவர் சம்பாதிக்கும் வருமானம் அவர் குடும்பத்தை நடத்த போதுமானதாக இல்ல பிள்ளைகள் வளர்ந்தன படிக்கவைக்க பள்ளியில் சேர்த்து விடுறாங்க 5 ஆம் வகுப்பு வரை படிக்கிறார்கள் வகுப்பு முடிந்து வீட்டிற்கு வருகிறார்கள் இரு மகன்களும்,
அம்மாவை கூப்பிடுறாங்க அம்மா அழுத்தமான குரலுடன் படுக்கை அறையில் இருந்து பதில் அளிக்கிறாள் என்ன அய்யா என்று மகன்கள் அறைக்குள் சென்று பார்த்தார்கள் தாயின் முகம் வாடிப்போய் இருந்தது என்ன என்று கேட்க ஒன்னும் இல்லை அய்யா நீங்கள் போய் படிங்க ந சம்சுடு கூப்பிடுறானு சொன்னால் சிறுவர்கள் இருவரும் படிப்பதற்கு சென்றார்கள் அம்மா இருமலுடன் சமையல் அறையில் சமையல் செய்கிறாள்,
அப்பா வேலை முடிந்து வருகிறார் பிள்ளைகளுக்கு சிறிது தின்பண்டம் கொடுத்தார் பிள்ளைகள் அப்பா அம்மாவின் கஷ்டங்களை உணர்ந்ததால் மற்ற பிள்ளைகளைப்போல் அது வேணும் இது வேணும்னு அடம்பிடிக்க மாட்டார்கள் எல்லோரும் ஒன்றாக இரவு உணவு சாப்பிடு உறங்குகிறார்கள்
இப்படி காலம் கடந்தது ஒருநாள் பள்ளிக்கு தகவல் வருகிறது பிள்ளைகளுக்கு உங்கள் அப்பா வேலைசெய்யும் விபத்தில் இறந்து விட்டார் என்று பிள்ளைகள் அழுதுகொண்டே வீட்டிற்கு செல்கிறார்கள்,
உறவினர்கள் கொஞ்சம் வந்து வீட்டில் அமர்ந்து இருந்தார்கள் கவலையாக அம்மா தன் மகன்களை கட்டி அணைத்துக்கொண்டு அழுகிறாள் கதறுகிறாள் இனி எப்படி என் பிள்ளைகளை காப்பாற்றப்போறேன் என்று சொல்லிக்கொண்டே கதறுகிறாள் பிள்ளைகளின் கண்களில் கண்ணீர் மழைபோல கொட்டுகிறது,
இறுதிச்சடங்கு முடிந்ததும் உறவுங்கள் எல்லோரும் பிரிந்து செல்கிறார்கள் அவர்களுக்கு ஆறுதல் சொல்லிவிட்டு,
கொஞ்சம் நாள் கடந்தது இரு பிள்ளைகளின் அப்பா பிள்ளைகள் படிப்புக்காக கொஞ்சம் கடன் வாங்கிருப்பது தெரிந்தது கடன் கொடுத்தவர்கள் அடிக்கடி வந்து கேட்டார்கள் இருந்த எல்லாத்தையும் இழந்துவிட்டார்கள் உணவுக்கு பஞ்சம் வந்தது அம்மாவுக்கும் உடம்பு முடியாமல் இருப்பதாய் அறிந்த இரு பிள்ளைகளும் படிக்கவும் முடியாமல் தவித்தன உறவினர்களிடம் உதவி கேட்டார்கள் உறவினர்கள் யாரும் உதவ முன் வராமல் இருந்த நிலையில் அம்மாவிற்கு அதிகமா உடம்பு முடியாமல் போகின்றன பிள்ளைகள் இருவரும் அம்மாவை அரசு மருத்துவமனையில் சேர்க்கிறார்கள் அனல் அவர்களுக்கு என்ன செய்வதறியாமல் திகைக்கிறார்கள் பிறகுதான் மருத்துவர் அய்யா சொல்கிறார் உங்க அம்மாக்கு புற்றுநோய் அதிகமாக இருக்கு என்று,
என்ன செய்வதென்று அறியாமல் அம்மாவின் அருகிலேயே இருக்கிறார்கள் உறவினர்களும் இல்லாமல் உணவின்றி இருக்கிறார்கள் இரண்டு நாள் கழிந்தன மறுநாள் நள்ளிரவில் அம்மா இறந்துவிடுகிறாள் விடிந்ததும் மருத்துவர் அய்யா வந்து பார்த்துவிட்டு சொல்கிறார் உன் அம்மா தவறிவிட்டால் என்று,
கேட்டதை அறிந்த இரு மகன்களும் அழக்கூட தெம்பில்லாமல் அம்மாவின் இறுதி சடங்கிற்காக அங்கு இருந்த எல்லோரிடமும் கை ஏந்துகிறார்கள் அம்மாவிற்காக கண்ணீர்கூட செலவிடமுடியாமல் வரத்துப்போன கண்களுடன் அம்மாவின் இறுதி சடங்கை இருவர்கள்மட்டும் அருகில் இருந்து செய்கிறார்கள் மனிதநேயம் கொண்ட மனிதர்கள் செய்த உதவியால்.....