நானுமோர் காதலன்

என் காதல் ஜெயமானது💟
இது வரை பரிதவித்த என் மனம்
புயலுக்கு பின் வந்த அமைதி போல்
சாந்தமானது🏵
மழைவிட்டும் விடாத தூவானமாய்
என்நெஞ்சில் சாரல் மழை பெய்தது!
விடிந்ததும் வான் மறையா விண்
மீனாய் என்னிலோர் ஒளி மின்னுது❣
நெடுநேரம் வெயில் நடந்தவன் பசு மரத்தோட்டம் கண்டவன் போல் குளிர்ந்து போனேன்🍉
மொட்டை மாடி நிலவொளியில்
வானம் விண்மீன்களுடன் ஜொலிப்பதை புதிதாக உணர்கிறேன்🌕🌝
கீழ் வானில் தோன்றிய வானவில்லின் வர்ணஜாலம்
கண் மூடியும் என் மன வானில்
உணர்கிறேன்🌕
தேன் கூட்டின் கீழ் நின்ற முடவனுக்கு
தானாய் வாயில் தேன் சொரிந்தது
போல் குதூகலித்தேன்🐝🐝🐝🐝

எழுதியவர் : பாலமுருகன் பாபு (12-Feb-18, 2:58 pm)
பார்வை : 119

மேலே