காதலர் தினம்
![](https://eluthu.com/images/loading.gif)
காதலர் தினம் அன்று
புதர்கள்
காதலர்களுக்கு
ஞானம் தரும் புத்தர்கள் ஆகும்
கடற்கரையில்
உடற்கரை ஆகும்
ரோஜாவின் இதழ் மட்டும்
சிவக்காது
ரோஜாவின் இதழும்தான்
திரை அரங்கிற்குக்
கண் இருந்தால்
திரைச்சீலைக் கொண்டு மூடிக்கொள்ளும்
தேகப் பிறை
தேய்பிறையில்
தேய்பிறை ஆகும்
பூங்காவில் தாவரம்கூடத்
தா வரம் என்று பூவையிடம் வேண்டும்
இருள் சூழ்ந்த இடமெல்லாம்
இவர்களின் விரல் சேர்ந்திருக்கும்
அனைவரும் ஆழ்வார்களாய்
ஆய்வு செய்வர்
புதிதாய்க் கவிதைகள் பிறக்கும்
தூய்மை இந்தியா திட்டம்
மறைவிடங்களை அழித்ததால் திட்டப்படும்
புதிய திட்டம் தீட்டப்படும்