பிரிவு

என் அத்தனை அன்பிற்கும் நீ கொடுத்த
முதல் பரிசு இந்த பிரிவு
விழிகள் வெந்நீர் கொதிக்கின்றன
உன் நினைவுகளின் கொள்ளியில்
உன் காயங்களை என் வலியாய் எண்ணியதாலோ என்னவோ
மனங்களை ரணமாக்குகின்றன உன் தூரங்கள்
வெள்ளை நெகிழிகளில் என் சுவாசம் அனுப்பியது
நீ வேடிக்கையாய் விளையாடுவாய் என்றல்ல
வாடிக்கையாய் நுகர்வாய் என்றே .......... மாறாய்
உன் விளையாட்டிற்கு நான் மெழுகு பொம்மையானதேனோ !!

என்னை ரணமாக்க அதிகம் முயற்சிக்காது இதே மௌனத்தை
நீ கடைபிடித்தால் நிச்சயம் நான் முக்தி கொள்வேன் .....

என்னை கொல்ல பத்து வார்த்தைகள் நீ பேசுவதை காட்டிலும்
பத்து நிமிடங்கள் நீ மௌனமாய் இருப்பதே சிறந்தது

எழுதியவர் : ராஜேஷ் (12-Feb-18, 4:21 pm)
Tanglish : pirivu
பார்வை : 268

மேலே