வேசியின் பிணம்

சவம் பேசும் சலனம்!!!!!!!!
இந்தக் கழிவறையோரம்
இழிவாய் கிடக்கும்
உடம்புக்கா பிரேதபரிசோதனை
உயிருடன் பலமுறை
அறுவை சிகிச்சை......
இச்சையினால் உமிழப்பட்டவள்...

நிர்வாண நெருப்புக்குழிக்கும்
புண்ணியநதியல்ல யான்;
பலமுறை காரியுமிழப்பட்ட
சாக்கடை கழிவுகள்
தேங்கிய காமத்தொட்டி.......

வேசியென ஒருமுகம்
அதிலில்லை மறைமுகம்
தவசியென தண்டூராப்போட்டபடி
தாழிட்டொழியுது ஒரு கூட்டம்.....

வேசிநாடுபவன் தேசமகனா???
அவனும் ________________________++

அனாதை அரங்கேற்றம்
அடமானம் மானத்தை;
சூழ்நிலை கைதியாக
சுதந்திர குற்றவாளிகளின்
சிறையில் சிதையுண்ட
உயிரின் மொழி!!!!!!!
Situation what will be the taught of one prostitute dead body!!!!!

எழுதியவர் : ரம்யா கார்த்திகேயன் (14-Feb-18, 5:51 pm)
பார்வை : 136

மேலே