ஒருபக்க கதை - வைரஎலி

எலி ஒன்று வைர வியாபாரி வீட்டிலிருந்து ஒரு வைரத்தை முழுங்கிவிட்டது..

மிகவும் விலை உயர்ந்த வைரம் அது.

வியாபாரி ஒரு எலி பிடிப்பவனை பார்த்து எப்படியாவது அந்த எலியை "ஷூட்"செய்து வயிற்றில் இருக்கும் வைரத்தை எடுக்க உதவ வேண்டும் என கேட்டுக் கொண்டார்..

எலி பிடிப்பவனும் தன் 'துப்பாக்கி’யுடன் வந்துவிட்டான்.. அதை ஷூட் செய்ய..

எலி அங்கே இங்கே என்று போக்கு காட்டி ஓடியதில் திடீரென்று ஆயிரக்கணக்கான சக எலிகள் ஒன்று கூடிவிட்டன..

ஆயிரக்கணக்கான எலிகளுக்கிடையேயும் அந்த வைரம் முழுங்கிய எலி மட்டும் அந்த எலிக்கூட்டத்தோடு சேராமல் ஒதுங்கியே ஓடிகொண்டிருந்தது. அது எலி பிடிப்பவனுக்கு வசதியாக போய்விட்டது..

சரியாக குறி பார்த்து அந்த எலியை டுமீல்..சுட்டான்..எலி spot out..

வைர வியாபாரி சந்தோஷமாக அந்த எலியின் வயிற்றைக் கிழித்து வைரத்தையும் எடுத்துக்கொண்டான்..

ஆனால் ஒரு கேள்வியை எலி பிடிப்பவனைப்பார்த்து கேட்டான்..

ஆமா! அந்த எலி மாத்திரம் மற்ற எலிகளோடு சேராமல் தனியே இருந்ததே!

நீயும் அதை சரியாக அடையாளம் கண்டு சுட்டுவிட்டாய்..என்ன காரணம்..!!?

அந்த எலி பிடிப்பவன் பதில் சொன்னான்...

இப்படி...

"முட்டாள்கள், தான் பணக்காரர்கள் ஆனதும் மற்றவர்களுடன் தன்னை தூரத்தில் வைத்துக்கொள்வார்கள்"

படித்ததில் பிடித்தது மட்டுமல்ல இவ்வுலக வாழ்க்கையில் 99% பேர் அப்படித்தான்.

எழுதியவர் : முகநூல் (15-Feb-18, 11:21 am)
பார்வை : 252

மேலே