வறுமை அகற்றல்
(வயது முதிர்ந்த பெரியவர் ஒருவர் சாலையோரம் உறங்கி கொண்டிருக்கிரார். வெயிலின் தாக்கம் அவரை போட்டு வாட்டியது.சிந்தும் வியர்வை உடம்பிலே வழிகிறது.வறண்ட நாவிற்க்கு மழை கூட இறக்கம் காட்டவில்லை.மாலை வரை இந்நிலையே சூழ்ந்து அவரை ஆட்டிக் கொண்டிருக்கிறது. பசியில் தவித்து கொண்டிருக்கும் முதியவர் உதவியில்லாமல் தடுமாறுகிறார்.அன்றைய பொழுது பசியிலும் கடும் வெயிலிலும் வரட்சியிலும் முடிந்து போனது..!!யார் இவர் எங்கிருந்து வருகிறார்.அனாதையா அல்லது அனாதையாக்கபட்டவரா.மனிதன் மனிதனுக்குள் நடக்கும் சில மனநிலைகளே இதற்கு காரணம்.நல்ல வாழ்கையை வாழ்ந்தவராக இருக்கலாம் அல்லது நல்ல வாழ்கையை காணதவராக கூட இருக்கலாம்.நல்ல வாழ்கையை வாழ்ந்திருந்தாலும் அவர் இந்நிலை எய்த நாமும் காரணமாய் இருந்திருக்கலாம். ஏனென்றால் நாம் மனிதர்கள் அல்லவா அடிக்கடி மனமுள்ளதை நாம் கொண்ட மறதி வியாதியினால் மறந்து விடுவோம்.நாம் செய்யும் தவறுகளினாலும் செய்ய போகும் துரோகங்களாலும் இந்நிலை ஏற்படலாம்.அதை தூரோகமாய் கருத காரணம் (தெரிந்த பின் செய்வதற்க்காக)
இரண்டாம் நாள் இரண்டு மணி நேரம் கூட தூங்காமல் பசியில் தவித்து இரவில் தூக்கத்தில் தவித்து அடுத்த நாள் பொழுதை கடக்க போகிறார். எழுந்து நின்று தண்ணீர் குடிக்க அருகாமையில் உள்ள அடிகுழாயை நாடி தண்ணீரை இறைக்கிறதா என அடித்து பார்த்தார்.நாட்டிலும் தண்ணீர் தட்டுபாட்டால் ஏமாற்றத்துடன் எழுந்து சாலையில் நடக்கிறார்.சிறுது தூரம் கழித்து பேருந்து நிலையத்தில் ஓய்வெடுக்க அமருகிறார்.அருகில் தேனீர் கடையுடன் ஓர் அங்காடி இருந்தது அங்கு சென்று தண்ணீரை கேட்கிறார்..!!கடைகாரன் அவரிடம் ஓர் தண்ணீர் பாக்கெட்டை எடுத்து வைக்கிறார்.சட்டைபையை பிடித்து கொண்டு கண்களில் நீருடன் கலங்கிய நிலையில் செல்கிறார்.அவர்க்கு அந்நேரத்தில் தாயாக அமைந்த அந்த மரத்தடியில் உறங்குகிறார். கொடுக்க பணம் இல்லை..!! குடிக்க நீர் இல்லை..!! என்ன செய்வான் அந்த கிழவன்..!! அந்த கிழவனை சூழ்ந்து புகைப்பவனும் அதிகம்..!! புன்னகைப்பவனும் அதிகம்..!! ஒருவனும் உதவவில்லை..!! பிச்சையை கேட்கவும் மனமில்லை..!! பிச்சையை கொடுக்கவும் எவனுமில்லை..!! மனிதன் என்ன பாவம் செய்தானோ என தெரியவில்லை..!! உயர்ந்த நிலையையும் அடைகிறான்.இது போல் தாழ்ந்த நிலையையும் அடைகிறான்.
கிழவனின் தத்தளிப்பு ஓர் நாள் ஓர் மகானின் கண்களில் பட்டது.அவன் உண்மையிலேயே பெரியவன் தான் அதனால் தான் அவனை மகான் என அழைக்கிறேன்.பள்ளி செல்லும் வயதில் பிஞ்சு நெஞ்சானாலும் அது இறக்கம் அறிந்த மனதானதே..!! எட்டி நின்று ஒருபுரம் இவன் அந்த முதியவரை பார்த்துக் கொண்டிருக்கிறான்.ஒவ்வொரு நாளும் பள்ளிக்கு செல்லும் வழியில் அம்முதியவனை கண்ட பிஞ்சு நெஞ்சானது அவரை பற்றி யோசிக்க வைத்தது.அவருக்காக ஏதாவது உதவ வேண்டும் என எண்ணியது.எல்லாம் அறிந்தவன் அறிவை உணருவதில்லை.ஒன்றும் அறியாதவன் ஓராயிம் முறை உணருகிறான்.இந்நிலையை அவனை பெரிதும் வாட்டி வதைத்தது அவனது நோக்கம் அவருக்கு உணவளிக்க வேண்டும் என்பதே..!! சிறு வயதில் சேமிக்கும் காசோலையை எடுத்து உதவ முன் வருகிறான்.அவனது சிறு சேமிப்பை எடுத்து உணவு பொட்டளத்தை வாங்குகிறான். வாங்கிக்கொண்டு மூத்தவனிடம் செல்கிறான் மரத்தடியில் சென்று அப்பொட்டளத்தை அந்த பெரியவர்க்கு பிரித்து வைக்கிறான். கைகளை உயர்த்தும் அப்பெரியவர் கைகளை பிடித்து தாத்தா. நான் சேமித்த சேமிப்பில் வாங்கினேன் இனி உமக்காக சேமித்து நிறைய வாங்கி தருகிறேன் என்று சொல்லி விட்டு ஓடி போகிறான்.
கதையில் நீதியொன்று ஒன்றுமில்லை. வருமை ஒழிய வேண்டும்.ஏதொ ஒர் இடத்தில் தான் வறுமை தொடங்க பட்டிருக்கும்.மனிதனிடத்தில் தான் முதன் முதலில் தொடர படுகிறது.வறுமை எங்கிருந்தும் தொடங்கலாம் அது நம்மிடமிருந்து தொடங்க கூடாது.சிறுவனுக்கு தொன்றியது நமக்கு தோன்ற வேண்டும். உதிர்ந்த பண்டங்களை நாம் சீண்டுவதில்லை.உதிர்ந்த பண்டத்தை எடுத்து உணவாக்கி கொள்கிறான் மனிதன்.மரணத்தின் பிடியிலிருந்து நீங்க மனமிழந்து குப்பையோடு சேர்கிறான்.மனிதன் என்பவன் மிகவும் உயர்ந்தவன்.அவன் உதரலானவன் அல்ல. வருமையை வீதியில் நிற்க வைப்பதும் நாம்.அதன் விதியை மாற்றி பிச்சையை எடுக்க வைப்பதும் நாம்.முடிந்த வரை வறுமையை ஒழித்து உயிர் காத்து வாழ்வோம்.
“தனியொரு மனிதனுக்கு உணவில்லை எனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்”