மனசே மனசே
மனம் .
எண்ணங்களின் உறைவிடம் ,
கற்பனையின் கருவறை
அளவில் இது ஆகாயம்
உருவில்லா அதிர்வலை
ஓய்வில்லா கடல் அலை
கனவுகளின் தொழிற்சாலை
ஞாபகத்தின் நீட்சி,
அந்தரங்கத்தின்ஒரே சாட்சி
இயக்கத்திலும் , உறக்கத்திலும்
ஓடுகின்ற கடிகாரம்
இருப்பதை இல்லையென்றும்
இல்லாதததை இருக்கென்றும்
பொல்லாமல் சொல்லிவிடும் .
நம் உள்ளிருக்கும் ஒற்றை
நண்பனும் இதுதான்
உருவமற்ற பல ஏதிரிகளும்
இதுதான்
அடக்க நினைத்தால்
சீரிப்பாயும்,
அறிய நினைத்தால்
ஓடி மறையும்
போரிட்டால்
அடிமையாவாய்,
புரிந்துவிட்டால்
மனிதனாவாய் ,
கடந்துவிட்டால்
ஞானி ஆவாய்.