யார் இவள்

பலரும் நேசிக்கும் தேவதையும் நானாவேன்...

பலரை ஏங்கவைக்கும் காதலியும் நானாவேன்...

என்னை இதயத்தோடு இறுகப் பற்றும் இதயங்கள் ஒரு புறம்...

என்னைத் திருடிச் செல்லக் காத்திருக்கும் கயவர்கள் ஒரு புறம்...

நான் அவ்வளவு அழகா!
இல்லவே இல்லை...

எனக்காக திறந்திருக்கும் வாசல்கள் ஏராளம்...

எனக்காக பூஜிக்கும் பக்தர்கள் ஏராளம்...

நான் அதிர்ஷ்டம் பெற்றவளோ!

எனக்கு ஜாதி மதம் எதுவுமில்லை..

நான் ஜாதி மதம் பார்ப்பதுமில்லை..

இன்னுமா என்னைத் தெரியவில்லை?

நான் தான் பணம்.

எழுதியவர் : கலா பாரதி (15-Feb-18, 2:26 pm)
Tanglish : yaar ival
பார்வை : 68

மேலே