கடல்

கடல்
=====

உலகின் மகா சக்தி
சுனாமியின் போது இல்லை புத்தி
கடல்

==============================

நீல வண்ண ஓவியம்
அழிவே இல்லா காவியம்
கடல்

===============================

அலைகளை கரைக்கு அனுப்பி
சிறுவர் மணல்வீட்டை சிதைக்கும்
இந்த பொல்லாக் கடல்

================================

ஆழத்தில் பயணிக்க முத்து தரும்
அதன் நீல‌த்தில் சுவைக்கான‌ உப்பு தரும்
கடல்

=================================

ஆழ்கடலில் அமைதி கொண்டிருக்கும் நீர்
கரையோரம் மழலையாய் ஆடிக் கொண்டிருக்கும்
ஓய்வின்றி

==================================

கடலில் உப்பதிகம்
மீனும் அதிகம்
வானும் அதிகம்

==================================

எழுதியவர் : அ.வேளாங்கண்ணி (18-Feb-18, 1:25 pm)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
Tanglish : kadal
பார்வை : 5463

மேலே