ஆதி உயிரினம்

தமிழைவிட கொசுவிற்கு வயது அதிகம்
ஆம்.. இது ஓர் ஆதி உயிரினம்..
எடையோ உடையோ இல்லை
ஆனால் பற்களோ நாற்பத்தி ஏழு..

மழை பெய்யும் போது கூட இதனால் பறக்க முடியும்
ஆண்டுக்கு இதன் பசிக்கு பலியாவோர் பத்து லட்சம் பேர்
கின்னஸ் சாதனையும் உண்டு இதன் பேரில்
உலகின் அபாயகரமான பூச்சியினம் என்று..

ஆண் கொசு சைவம்..
பெண் கொசுவோ அசைவம்
அது கடிப்பதும் பெண்களைத்தான்
வைட்டமின் பி கொசுவின் எதிரி
இது அதிகமாக இருப்பவர்களை கொசு நெருங்காது

ஏடிஸ் வகை கொசுவே டெங்குகாரணி
இதனை விரட்ட தனி ஒருவன் நினைத்தாலோ
ஆட்சியாளர் நினைத்தாலோ உடனே நடக்காது
சமுதாயத்திலுள்ள ஒவ்வொருவரும் நினக்க வேண்டும்

கொசுவின் புகழ் உலகம் அறியும்
அதனை விரட்ட புதிய சட்டம் வரணும்
சமுதாயம் நினைக்க புதிய புரட்சிகளே நடந்திருக்கும் போது
கொசுவையா ஒழிக்க முடியாது

இதனை வளர்த்துவிட்ட சமுதாயமே
இதனை முடித்துவைக்க வேண்டும்

எழுதியவர் : அ.வேளாங்கண்ணி (18-Feb-18, 1:11 pm)
Tanglish : Aathai uyirinam
பார்வை : 117

மேலே