இயற்கை

இளங்காலை நேரம்
வித விதமாய் பூக்கள்
பூத்து மணம் பரப்பும்
பூஞ்சோலை ,இலைகள்மேல்
தூங்கும் பனித்துளிகள்
கதிரவன் ஒளி பட்டு
உருகி பனிமழைத் தர
ஒளியும் பிரிந்து
வண்ண கோலமாய்
மலர் ஆரம்போல்
இலைகள்மேல் காட்சி தர
வானவில் தரை இறங்கியதுபோல்
காட்சி அதில் நான் மகிழ்ந்திருக்க
எங்கிருந்தோ பறந்து அங்கு
வந்து சேர்ந்தது ஒரு ராஜாத்தி
வண்ணத்தப் பூச்சி
செண்பகமலரின் மகரந்தம் உறிஞ்சிட
அதன் வண்ணச்சிறகில் வானவில்...அதன் நிறங்கள்
அருகில்சென்று உண்ட மயக்கத்தில் இருந்த
வண்ணத்துப் பூச்சி என் விரல்களில் இப்போது,
வானவில்லை கையில் அணைத்த மகிழ்ச்சி
என்னுள்ளத்தில் ......................
இயற்கையே உந்தன் விந்தைத்தரும் எழிலில்
என்னை மறந்தேன் நான்.

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (18-Feb-18, 10:13 am)
Tanglish : iyarkai
பார்வை : 779
மேலே