கிணற்றின் கண்ணீர்

கிணற்றின் கண்ணீர்...!

வேகாத வெயில்ல... என்ன வெட்டி வச்சாங்க...
வேர் உறுஞ்சும் நீர் எல்லாம்
என்ன நெறச்சு வச்சிரும்னு...

வெல்லாம வச்சாச்சு!
விதை நெல்லும் ரெடியாச்சு!
மழை பேஞ்சு நாள் ஆச்சு!
மயில் ஆட மறந்து போச்சு!
தவளை சத்தம் காணாப்போச்சு!...

நா காதலிச்ச பம்பு செட்ட
கலட்டி வெளிய போட்டுட்டாங்க
கழனியில கால் வைக்க
கை தூக்கல்ல ஒரு பைய

தண்ணி ஓடா வாய்க்காலும்
தாகமுன்னு கேக்குதுங்க
பசுமாட்டு பசி சத்தம்
எதிரொலிக்குது எனக்குள்ள...

ஏர் இழுத்து எழுந்த நரம்பு
இறந்து விட்டது இளந்தலைமுறைக்கு
MNC என்ற எருமை – மாட்டை
மேய விட்டான் விவசாயத்துல...

போட்ட போஃர் வழியாக
பொழந்து கொட்டுது
கருப்பு நயில் நதி !
கண் விழிக்கும் குறுட்டு உலகம்
துயில் எழுப்புது வரண்ட நதி...

ஏர் பிடித்தவன் ஏமாந்தவன் என்றாய்!!
ஏடு தொட்டு திரு ஓடு ஏந்தும்
நீ யார்?
என கூறும் நான் நீர் இல்லா
இளநீர் ஊற்று நதி... [கிணறு]

எழுதியவர் : ர. ரவி கிருஷ்ணன் (18-Feb-18, 9:48 pm)
Tanglish : kinatrin kanneer
பார்வை : 174

மேலே