காதலின் பாடம் பிரிவு தான்

***விட்டுச்செல்லாதே
விழித்திச்செல்லாதே***

***ஐபில் டவர் போல் நம் காதல் இருந்தது அன்பே, இன்று பைசா கோபுரமாய் சாய்ந்தது ஏனோ....

***மென்மையான விளக்காய் தெளிவாய் ஒளிர்ந்த நம் காதல், இன்று தெளிவற்ற இரவாய் போனதே ஏனோ....

***மின்கடத்தும் கம்பியை போல் நாமிருந்தோம் அன்பே, இன்று மின்கடத்தா காகிதமாய் ஆனோம் ஏனோ....

***முத்தாக உனை காக்க தவித்தேன், ஏனோ கடற்கரை தட்டும் படகாய் போனாய் அன்பே....

***கோவில் போல் நம் காதல் இருக்க,
ஏனோ நீ பக்தனாய் வந்து போனாய் அன்பே....

***உறவாய் உனை ஏற்கத் துணித்தேன் ஏனோ, கனவாய் நீ மாறிப் போனாய் அன்பே....

***உயிராய் உனை சுமக்க நினைத்தேன், ஏனோ பாரை விட்டுப் பிரிந்துபோனாய் அன்பே....

***மேகத்தின் மழைத்துளியாய் படர்ந்தோம் நாம், ஏனோ இன்று கண்ணீர் கடலாய் தடம் தரிக்கிறோம் அன்பே....

***உன்னை நினைத்து நினைத்து நனைந்து போனேன் உயிரே கண்ணீர் மல்கி....
காதல் கடலில் மூழ்கி....

விட்டுச்செல்லாதே அன்பே எனை விழித்திச்செல்லத்தே

எழுதியவர் : மு நாகராஜ் (20-Feb-18, 10:38 pm)
சேர்த்தது : மு நாகராஜ்
பார்வை : 141

மேலே