என் தோழிக்கு
என் தோழிக்கு
~~~~~~~~~~~~~
சாலச் சிறந்தது காதல்
காதலிலும் சிறந்தவன் நீ...
உன் திருமண தேடலில்
பூஞ்சோலை கோர்வையானவள்
நான்...
என் வேதனை விளையாட்டுகளில்
வேலியாக வியர்வையில் துடைத்தவன் நீ...
என் விதிகளின் வித்தியாசத்தில்
உன் தேடலின் திடமான மனைவி ஆனேன்...
நானும் உன் உயிர்நாடியில் ஒருவளே...
உன் மறு உயிரை ஈன்று எடுத்த என்னை
சந்தேகத்தில் சலனம் செய்கிறாயே...
உனது சாகா காதலை
தேடிவந்து தேவையோடு தேனமிர்தம் கொடுக்க நினைத்தவள்...
கண்ணால் கைது செய்த கணவா
கால் மண்ணை முத்தத்தால் முத்தாக மாற்றுகிறேன்...
நம் முத்தோடு என்னை மறு ஜென்மமாக ஈன்று எடுப்பாயா அன்பு கணவா...
கண்ணீரோடு உன் காதல் மனைவி...