ஏன் இன்னும் இம்சிக்கின்றாய்

அது ஒரு காற்றில்லாக் காலைப்பொழுது.
ஆனந்தம் மறுக்கப்பட்டே மலர்ந்த நேரம்.

கனவுகள் தடுமாறி ஒழுகி, நினைவுகளில்
ஒட்டி உறவாடிக்கொண்டிருந்த உதையநாள்.

செவ்விதழ்கள்கொண்ட பச்சைக் கிளிகள்கூட
கனிந்த பழங்களை வெறுத்துநின்ற நிமிடம்.

சந்தோசக் குயில்கள்கூட கூவுனபோழுது
திக்கித் திணறித்தான் நின்றன.

இளங்காலை ஆதவன்கூட யோசித்துத்தான்
கிழக்குக்குள் மங்கின ஒளியுடன் வெளிப்பட்டான்.

நினைவுகள் மழுங்கிக் கிடந்த அந்த நொடியிலும்
தாங்கவேமுடியவில்லை உன் உறவுத்தொல்லை.

கனவினுள் உறவாடினவள் சும்மாயிருக்காமல்
கொளுசுகொண்ட கால்களை வேறு ஆட்டிநிற்கிறாள்.

நமக்குள் உள்ள காதல், நட்பாகினபின்
இன்னும் ஏன் என்னை இம்சிக்கின்றாய்.


எழுதியவர் : jujuma (5-Aug-11, 3:16 pm)
பார்வை : 331

மேலே