இறைவன் தந்த வரங்கள்..............


(This is my school life poem and also the first one. This poem got the first prize in a big competition.)

தங்க ஒளியை வீசிக்கொண்டு
உதயமாகும் சூரியன்!
மிதமான வெப்பம்!
காலை நேர ஓட்டம்!
காற்றை சீறி செல்லும் வாகனங்கள்!
நல்ல நட்பு!
நம்பிக்கையான உறவுகள்!
நேசிக்கும் இதயங்கள்!
இதமான தென்றல்!
காற்றோடு தாளம் போடும் நெற்றியோர முடிகள்!
கவலையின்றி தாவி குதிக்கும் குழந்தைகள்!
அர்த்தம் புரியாத உணர்வுகள்!
அழகான கோபங்கள்!
ரசிக்க இயலாத பயங்கள்!
காரணம் இல்லாத அழுகைகள்!
அழகான வானம்!
வானம் அழகோடு போட்டி போடும் நிலவு!
சலனமற்ற இரவு!
கண்ணை கட்டிபிடித்து கொண்டு இருக்கும் தூக்கம்!
தூக்கம் வராமல் தவிக்கும் சில இரவுகள்!
மலை சாரல்!
மலை நின்றதும் என் தோழி, மளைகிளையை குழுக்கியவுடன்
அவள் கை வழியே வழிந்து கொட்டும் மலை துளிகள்!
மழையை ரசித்து கொண்டும் நடக்கும் நினைவுகள்!
பார்த்தவுடன் நாம் இதயம் தொலைக்கும் நாய்குட்டிகள் !
அழகான குட்டி இதய வடிவங்கள்!
நேசத்தை பகிர்ந்து கொள்ள கிடைக்கும் உயிரில்லா பொம்மைகள்!
என்ன அழகு என்று வர்ணிக்க வைக்கும் தளிர் இலைகள்!
அழகான மயில் இறகுகள்!
மலையோர பளிச் விளக்குகள்!
மறுபடி மறுபடி பார்க்க தூண்டும்
ஆணின் வசீகரமும் பெண்ணின் வசீகரமும்!
பேச வார்தையற்று நிற்கும், சில நிமிடங்கள்!
பாச பூரிப்புகள்!
அன்பின் வெளிப்பாடுகள்!
பாசத்தை வெளிக்காட்டும் சிற்சில பரிசுகள்!
சிறுகுழந்தையின் அழுகை, சிரிப்புகள்!
மழலை வார்த்தைகள்!

இவை எல்லாம் போததா? இறைவா!
உந்தன் அன்பின் பெருமையை விளக்க!
நீ ஒரு நல்ல ரசிகன் என்பதை காட்ட!
நீ
என்றென்றும்
அருகில்
இருப்பதாய் உணர்த்த!

எழுதியவர் : நிஷாந்தினி.கே (5-Aug-11, 4:07 pm)
பார்வை : 722

மேலே