பெண்ணின் காதல்
நீ செய்யும் சிறு செயலைக் கூட பெரிதாக எண்ணும் அவளுக்கு உன் நேரம் அளவில்லா மகிழ்ச்சியைத் தரும்...!!
அவள் மனதில் நீ குடி கொண்டால்...நீயாக நினைத்தாலும் வெளிவர முடியாது...அன்புச் சிறையில்...!!
பரிசுக்கும் பணத்திற்கும் ஆசைப்படமாட்டாள்...உன் பார்வைக்கும் பாசத்திற்கும் என்றும் ஏங்குவாள்...!!
அறிவு உணர்த்துவதை மறக்கிறாள்...அன்பு உணர்த்துவதைச் செய்கிறாள்..!!
மனம் சொல்கிறது உன் பெயரை..சொல்ல மறுக்கிறது அவளது உதடுகள்..!!
பித்து பிடித்தவள் போல் இருக்கிறாள்....நீ கடக்கும் துன்பங்களைக் கண்டு துடிக்கிறாள்...
உன் மகிழ்ச்சியிலும் துன்பத்திலும் சேர்ந்து வாழ விரும்புவாள்...!!
இவ்வளவும் ஒரு பகுதியே...!!!
பெண்ணின் காதல்...!!