Madhumitha - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Madhumitha |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 27-Aug-2017 |
பார்த்தவர்கள் | : 77 |
புள்ளி | : 18 |
"மேற்கோள்குறி" கொண்டு ஆரம்பிக்கும் நம் வாழ்க்கை
நட்சத்திரக்குறி* கொண்டு நம் தவறுகளைத் திருத்திக் கொள்கிறோம்
காற்புள்ளி, கொண்டு நம் குற்றங்களைப் பலர் பிரித்து சுட்டி காட்டினாலும்
முக்காற்புள்ளி: கொண்டு விளக்கி
அரைப்புள்ளி; கொண்டு நம்முள் இருக்கும் நற்குணங்களை வெளி கொண்டு வருகிறோம்
இணைப்புக்குறி& கொண்டு இன்பங்களையும் துன்பங்களையும் சேர்த்து பழகுகிறோம்
உடைமைக்குறி' கொண்டு உரிமை கொண்டாட பழகினால்
கேள்விக்குறி? ஆகிவிடும் நம் வாழ்க்கை
ஆதலால் அனைவரும் ஆச்சரியக்குறி ! கொண்டு அனைவரும் வியக்கும் அளவிற்கு
வாழ்க்கையை முற்றுப்புள்ளி . வைத்து முடிக்காமல் தொக்கிக்குறி .... கொண்டு தொடர்வோமாக
காதல், கவிதை இல்லை..கவிதை காதல்..!
கவிதையைக் காதலிப்பவருக்கு காதல் கவிதையாக மாறுகிறது..
காதலும் கவிதையும் பிரிந்தும் சேர்ந்தும் வெளிப்படும் எண்ணமும் எழுத்தும்..
களைப்பில்லாமல் கவிதையை காதலிக்கும் காண்பாளர்களும்..
களிப்புடன் காணும் கவிஞர்களும்...
இயங்காத உணர்வுகளை இயங்க வைக்கும் காதலும்..
இயலாத செயல்களை செய்ய வைக்கும் கவிதையும்..
மிகையில்லா கவிதை காதலை வெளிப்படுத்தும் கவிதை அல்ல..
காதலையும் எழுத்துக்கள் மூலம் உணரவைக்கும் ஒன்றே மிகையில்லாத கவிதை..!!!
நீ செய்யும் சிறு செயலைக் கூட பெரிதாக எண்ணும் அவளுக்கு உன் நேரம் அளவில்லா மகிழ்ச்சியைத் தரும்...!!
அவள் மனதில் நீ குடி கொண்டால்...நீயாக நினைத்தாலும் வெளிவர முடியாது...அன்புச் சிறையில்...!!
பரிசுக்கும் பணத்திற்கும் ஆசைப்படமாட்டாள்...உன் பார்வைக்கும் பாசத்திற்கும் என்றும் ஏங்குவாள்...!!
அறிவு உணர்த்துவதை மறக்கிறாள்...அன்பு உணர்த்துவதைச் செய்கிறாள்..!!
மனம் சொல்கிறது உன் பெயரை..சொல்ல மறுக்கிறது அவளது உதடுகள்..!!
பித்து பிடித்தவள் போல் இருக்கிறாள்....நீ கடக்கும் துன்பங்களைக் கண்டு துடிக்கிறாள்...
உன் மகிழ்ச்சியிலும் துன்பத்திலும் சேர்ந்து வாழ விரும்புவாள்...!!
இவ்வளவும் ஒரு பகுதியே...!!!
பெ
கடும் குளிர்..எதிர் காற்று வீசி கண்களில் இருந்து தண்ணீர் வரும்வரை இன்று குளிர்கிறது..
இப்படிபட்ட நிலையிலும் காலையில் எழுகிறாள்..பிறர் வாழ்க்கையில் நறுமணம் வீச வைக்க கிளம்புகிறாள்..
தன் வாழ்க்கையிலும் பிறர் வாழ்க்கையிலும் நல்ல தொடக்கம் தர காலையில் வருகிறாள்..
தன்னால் இவ்வளவு பெரிய தொடக்கம் பிறர் வாழ்க்கையில் கொடுக்க முடியும் என்பதை மறக்கிறாள்...
குளிர் காற்றில் காத்துக்கொண்டிருக்கிறாள்...நேரம் ஆக ஆக யாரும் வரவில்லை...வருந்துகிறாள்...
வாடிய அவள் முகம்...ஒருவர் வருவதைக் கண்டு மீண்டும் மலர்கிறது...!
பூக்களை ஆசையோடு அவரது தினம் மலர தருகிறாள்...பூ விற்கும் பெண்....!!!
பகலில் சூரியனின் கதிர்கள் போல மனதில் உன் நினைவுகள்...
இரவில் பௌர்ணமி போல கனவுகளிலும் அழகாய் தோன்றுவாய் நீ..!
வானத்திடம் ஒரு கேள்வி..!
சூரியனும் சந்திரனும் இல்லாமல் வானம் கிடையாதா??
வானத்தின் பதில்..!
சூரியனும் சந்திரனும் இயங்காமல் நான் இல்லை..! என்றது வானம்..!
கனவுகளிலும் உன் நினைவுகளிலும் வாழும் இந்த மனதிற்கு என்றேனும் ஒருநாள் வெளிச்சம் தருவாயா..??!
காந்தம் என்றால் என்ன??
பிரிந்த இரு இரும்பைத் தன் காந்தச் சக்தியால் ஒன்று சேர்ப்பதே அதன் வேலை!!
அதைப் போல பிரிந்து இருக்கும் மனதைச் சேர்த்து வைக்கும் அன்பிற்கு சக்தி அதிகமே!!
இரும்பு மனதையும் இலகுவாக கரைத்திடும்..! அன்பு..!
மன்னிக்கவும் மன்னிப்பு கேட்கவும் அன்பு காரணமாகிறது..!!
அன்பு..!! ஒருவர் மீது வந்தால்..அவர் அதை வெறுத்தாலும் விட்டு விலகாது..!!
கோபம் என்னும் பூட்டைத் திறக்க உதவும் சாவியும் அன்பு!!
மனிதனையே வெல்லும்...உண்மையோடு..!!
அன்பு..!!!
உன்னை நான் பார்க்கையில் நீ உருகுவதைக் கண்டு வியந்தேன்...
நானும் உன்னோடு சேர்ந்து உருகினேன்...
ஆக எத்தனை அழகு..!
உன்னை எவரேனும் பார்த்துவிட்டு வேண்டாம் என்று சொல்லத்தான் கூடுமோ..!!
இரவில் நான் பார்க்கும் வெண்ணிலாவில் நீ தெரிந்தாய்...!
கனவு என விலகிச் சென்றேன்..!
அடுத்த நாள் சாக்லேடாகவும் தெரிந்தாய்..!
அட என்ன..! என் மனதை விட்டு நீங்க மாட்டாயா நீ....!
உன்னுடன் இருக்கையில் என் மனம் குளிர்ந்தது இனிமை அளிக்கிறது..!
காதலில் விழுந்தேன்..!!!
அடுத்து நாள்...உடல் நல குறைவு..!
ஐஸ் கிரீம் மீது காதல்..!!!!!!
அவளோ தலையில் பூக்களை வைப்பதில் கவனமாக இருந்தாள்...
அவனோ இயற்கையை ரசிப்பதில் ஆர்வம் செலுத்திக் கொண்டிருந்தான்..
ஒரு அழகிய பட்டாம்பூச்சி..இயற்கையை ரசித்த இவன் வண்ணத்தில் ஈர்க்கும் இப்பூச்சியை விட்டு வைக்கவில்லை..!
சென்றான் பின்தொடந்து...!!
அவனை ஈர்த்தது பட்டாம்பூச்சி..ஆனால் அந்த பூச்சியை ஈர்த்தது அந்த பெண்ணின் தேகம்..!
தன் இறக்கையை விரித்து வண்ணங்களை பரப்பி அவளிடம் சென்றது பூச்சி..!
பின் தொடர்ந்தது அவன் கண்கள்..!!!!
இரு கண்கள் ஒன்றோடு ஒன்று பார்க்க..!
இரு இதயமும் சேர்ந்து துடிக்கும் போல் உணரும் தருணம்..!
கண்டதும் காதல் மீது நம்பிக்கை இல்லாதவன்...உணர்ந்தான்..
காதலை..!:)
உன்னை நான் பார்க்கையில் நீ உருகுவதைக் கண்டு வியந்தேன்...
நானும் உன்னோடு சேர்ந்து உருகினேன்...
ஆக எத்தனை அழகு..!
உன்னை எவரேனும் பார்த்துவிட்டு வேண்டாம் என்று சொல்லத்தான் கூடுமோ..!!
இரவில் நான் பார்க்கும் வெண்ணிலாவில் நீ தெரிந்தாய்...!
கனவு என விலகிச் சென்றேன்..!
அடுத்த நாள் சாக்லேடாகவும் தெரிந்தாய்..!
அட என்ன..! என் மனதை விட்டு நீங்க மாட்டாயா நீ....!
உன்னுடன் இருக்கையில் என் மனம் குளிர்ந்தது இனிமை அளிக்கிறது..!
காதலில் விழுந்தேன்..!!!
அடுத்து நாள்...உடல் நல குறைவு..!
ஐஸ் கிரீம் மீது காதல்..!!!!!!
அவளோ தலையில் பூக்களை வைப்பதில் கவனமாக இருந்தாள்...
அவனோ இயற்கையை ரசிப்பதில் ஆர்வம் செலுத்திக் கொண்டிருந்தான்..
ஒரு அழகிய பட்டாம்பூச்சி..இயற்கையை ரசித்த இவன் வண்ணத்தில் ஈர்க்கும் இப்பூச்சியை விட்டு வைக்கவில்லை..!
சென்றான் பின்தொடந்து...!!
அவனை ஈர்த்தது பட்டாம்பூச்சி..ஆனால் அந்த பூச்சியை ஈர்த்தது அந்த பெண்ணின் தேகம்..!
தன் இறக்கையை விரித்து வண்ணங்களை பரப்பி அவளிடம் சென்றது பூச்சி..!
பின் தொடர்ந்தது அவன் கண்கள்..!!!!
இரு கண்கள் ஒன்றோடு ஒன்று பார்க்க..!
இரு இதயமும் சேர்ந்து துடிக்கும் போல் உணரும் தருணம்..!
கண்டதும் காதல் மீது நம்பிக்கை இல்லாதவன்...உணர்ந்தான்..
காதலை..!:)
கடல் அலையை பார்த்தீரா!
அவை ஒன்றின் பின் ஒன்றாக கறையை வந்து சேர்கிறது..ஓய்வில்லாமல்...
அதைப்போல உன் நினைவுகள்..! அதைப் பார்த்துக்கொண்டு இருக்கும் உன் கால்களை நனைக்க நினைக்கிறது...
நினைவலைகள்...!!
ஒவ்வொரு நிமிடத்திலும் என்னுள் ஓடிக்கொண்டு
இருக்கும் மணித்துளி நீ!
ஆனால் உன் 24 மணி நேரத்தில் ஒரு நொடியில் கூட நான் தோன்றவில்லையா?!