கவிதை காதல்

காதல், கவிதை இல்லை..கவிதை காதல்..!
கவிதையைக் காதலிப்பவருக்கு காதல் கவிதையாக மாறுகிறது..
காதலும் கவிதையும் பிரிந்தும் சேர்ந்தும் வெளிப்படும் எண்ணமும் எழுத்தும்..
களைப்பில்லாமல் கவிதையை காதலிக்கும் காண்பாளர்களும்..
களிப்புடன் காணும் கவிஞர்களும்...
இயங்காத உணர்வுகளை இயங்க வைக்கும் காதலும்..
இயலாத செயல்களை செய்ய வைக்கும் கவிதையும்..
மிகையில்லா கவிதை காதலை வெளிப்படுத்தும் கவிதை அல்ல..
காதலையும் எழுத்துக்கள் மூலம் உணரவைக்கும் ஒன்றே மிகையில்லாத கவிதை..!!!

எழுதியவர் : (12-Aug-18, 2:08 pm)
சேர்த்தது : Madhumitha
Tanglish : kavithai kaadhal
பார்வை : 77

மேலே