மெல்லினம்
மான்நாணும் மீன்நாணும் மஞ்ஞை மனம்நாணும்
மான்நாணு முன்முன்ன மன்னமே:- நூன்நாணும்
மின்னுமுன் மின்நாணும் மென்னன்ன மும்நாணு(ம்)
மென்மன மென்னாம் நினை?
மானும் மீனும் உன் கண்காண நாணும்
ஆம் அந்த மன்மதனின் கொடியாம் மீனும் அவன் உலாவரும் மானும் நாணும்
ஏன் ஏன் மன்மதனே நாணும் முருகு வாகனமாம்
மஞ்ஞை-மயிலும் நாணும்
மான் மையலும் நாணும்,
நூல் ஆம் இடை என்னும் நூலின் முன்னே மின்னுவதற்கு முன்னே மின்னல் நாணும் மின்னியதும் இவள் இடைக்கு இணையாக மாட்டோம் என்றுதான் ஒளிந்து கொள்கிறதோ என்னவோ..?
மென்னடை அன்னமும் நாணுமென்றால்
என் மனம் என்னாகும் இதை நினைத்துப் பார்த்தாயா பெண்ணே...
உன்னைப் பாடும் போது எழுத்துக்கள் எல்லாம் மெல்லினம் ஆகிறது மெல்லியலே
அது தான் மெல்லினம் நீ,,,,

