ஸ்ரீதேவி

சென்ற தலைமுறை
இளைஞர்களின் கனவுகளில்
தொந்தரவு செய்தவர்.

கற்பனைகளில்
மனம் கலைத்தவர்.

லட்சக்கணக்கானவர்களின்
காதலுக்குரியவர்.

அழகும், பொலிவும்
கசிந்த
ஒய்யாரங்களில் மட்டுமல்ல;
அறியாமை வெகுளியாகவும்,
நிமிர்ந்தவர்!

சினிமாவின் பிடியிலும்
சினிமா இவர் பிடியிலும்
சில ஆண்டுகள் செழித்தது.

ஒப்பனைகளில்
கலைந்து போகாத
ஒளிச்சுடர்.

பயணம் முடிந்து போயிருக்கலாம்
சாதனைகள்
சினிமா வரலாற்றை
எழுதிச் செல்லும்.

எழுதியவர் : வானம்பாடி கனவுதாசன் (25-Feb-18, 1:47 pm)
சேர்த்தது : கனவுதாசன்
பார்வை : 98

மேலே