கோணலான மனம்

என்னை நானே தேற்றி
கொண்டிருந்தேன்
என் செய்கைகள்
எனக்கே தெரியாமல்
பார்க்கப்படும் பார்வைகள் பரிதாபங்களாய்
உள்ளதை இன்றுணர்ந்தேன்
சிறு குறை உள்ள சிற்பமானாலும்
கலையிழந்த காலைப்பொழுதாய் தோன்றுமே...
உயிரற்ற உருவகத்தின் மீதே உணர்வுகள் இப்படி இருக்கையில்
வளைந்த சக்கர கொண்ட வாகனம் போல் உள்ள என் உருவம் என்னோடிணைந்து எவருக்கு பிடிக்கும்...

எழுதியவர் : P Rem O (26-Feb-18, 7:29 am)
சேர்த்தது : P Rem O
Tanglish : konalana manam
பார்வை : 722

மேலே