பெண்ணே...பெண்ணே...

பெண்ணே
தலைகுனிந்து
நடந்த காலம்
போகட்டும்
இனி
நீயும்
தலைநிமர்ந்து
நடக்க பழகிக்கொள்
நெஞ்சில்
உறுதியோடு
கைவீசி
நடக்க
கற்றுக்கொள்
உனது
பூப்பாதம்
மண்ணில்பட்டு
மலரட்டும்
எத்தனை
தேவதைப்பயல்கள்
உலாவும் இந்த
மண்ணிலே
எப்போது யோனி
கிடைக்குமென
அலையும் ஓநாய்களும்
சதைபிண்டத்தையும்
விட்டுவைக்காது ருசிக்க
துடிக்கும் அகோர அரக்கன்கள்
இருக்கும் இந்த
மானிட பூமியில்
இனி நீங்களும்
ஒரு நேதாஜியாய்
ஒரு ஹிட்லராய்
ஒரு காஸ்டோவாய்
ஒரு சேவாய்
ஒரு பிரபாகாரனாய்
ஒரு குயிலியாய்
உனை தீண்டும்
உனை ஒடுக்கி
பெண்ணென இழிவாய்
கொடுமைபடுத்தப்படும்
நடத்தும்
யாவரிடத்திலும்
யாவரையும்
விட்டுவைக்காதே
கேள்விகேட்க மறுக்காதே
உனை வெளிப்படுத்த
தயங்காதே பெண்ணே
பூவாக இருக்கும்
நீ பூகம்பமாய்
புயலாய்
பேராளியாய்
பத்ரகாளியாய் உணர்ச்சி
பொங்கி எழுந்து
கோவத்தை காட்டு
பத்திரம் பாதுகாப்பு
கற்பு பெண்மையென
தயங்கி தயங்கி
வீட்டிலே முடங்கிய
காலம் போகட்டும்
பெண்களே.....

..##சேகுவேரா சுகன்....

எழுதியவர் : சேகுவேரா சுகன்... (26-Feb-18, 3:10 pm)
சேர்த்தது : cheguevara sugan
பார்வை : 63

சிறந்த கவிதைகள்

மேலே