காகித பூக்களும் நானும்

என் நினைவுகள்
கொட்டி தீர்த்து
வாடி போனது
நான் நீட்டிய பூக்கள்
மட்டுமல்ல..

நான்கு சுவருக்குள்
யாரும் அறியாது
நான் எழுதி
கசக்கிய காகித பூக்களும்தான்..

உன் பெயரையே
கவிதையாக
தாங்கிய
காகிதபூக்களோடு
நான் மட்டும் தனியாய்....

எழுதியவர் : சந்தோஷ் (28-Feb-18, 7:09 am)
பார்வை : 84

மேலே