இம்சை தந்திடாதே
நான் ஏன் உன்னை பார்த்தேன்?
இயல்பாக இருக்க முடியவில்லை,
இம்சையாய் வாட்டும் உன் நினைவால் இதயம் சுவாசிக்க மறந்து விடுகிறது★
சந்திர கலையில் சுடு மூச்சும்,
சூரிய கலையில் குளிர் மூச்சுமாய்
பிராணாயாமம் கூட என் பிராணன் வதைக்கிறது★
சீரகத்தை காய்ச்சி குடித்தும் என் அகம் சீராகவில்லையே★
தலைகறுக்க கறிவேப்பிலை அரைத்து குடித்தேன், ஆனால் உன்னால் என் இதயம் கருகி கறுத்து போனதே,★யோகா செய்து உடல் நல யோகம் பெற்றேன்,
உனை நினைத்து மோகத்தில் தேகம் கெட்டேன்★
இயற்கை உணவாக உண்டு உயிர் வளர்த்தேன்,
நீ இல்லாமல் இயற்கை எய்தும் நிலை வந்திடுமோ கலங்கி நிற்கிறேன்★
தாயாக வாராய் நீ எனக்கு★
தீயாக மாறாய் நீ எனக்கு ★