பொல்லா உலகம்

தன் வேலைதனை கடமைஎன செய்யும் நடிக நடிகையரை வான் மின்னும் தாரகையாக்கி அவர் பின்
வான் பறக்கும் வல்லூறாய் செய்தி சேர்த்து தம்பட்டம் கொட்டி தனிக் கட்டம் கட்டும் ஊடகங்கள்,
வான் நோக்கி காத்திருக்கும் பயிராக
ஊன் வளர்க்க பாடுபடும் வறியவர்
வன்கொடுமை பட்டால் ,உயிர் விட்டு
வான் தொட்டால் ,கிணறு வாழ் மண்டூகமாய்மறைந்து மண்டூர மனம் கொண்டு சிறு கட்டத்தில் கூட மண் மறைந்த
செய்தி காட்டாமல் போவதேன்? சாமானியனின் உயிர் தலை மயிருக்கு சமானம், காசுள்ளவன் உயிர் தங்க கயிறுக்கு சமானமா?
ஏனிந்த ஏற்ற தாழ்வு? இதயம் இடர் பட்டு சிதையிட்டது போல சிதைகிறது!சிந்திப்பீர் சில நொடி(ஆதரவு) இல்லாதோர் நினைத்து🙏🙏🙏