ஆஹா எத்தனை அழகு எண்ணிலா அழகு
வானம் தொங்கி ஒளிரும் விண் மீன்களில்
வகை வகையாய்ச் சுற்றும் பறவை இனங்களில்
அங்கும் இங்கும் அலைந் தோடும் முகில்களில்
பக்கம் இசை பாடும் இளங்காலைக் குயில்களில்
அருகே வழிந்தோடும் சிறு சிறு நதிகளில்
அழகாய் நீந்தி விளையாடும் நதி மீன்களில்
அங்கும் இங்கும் அசையும் சிறு கொடிகளில்
பசுமை பொங்கும் நெல்வயல் வெளிகளில்
தென்றல் தவழ்ந்து ஆடும் பச்சை மரங்களில்
தெவிட்டா இன்பம் தரும் எண்ணிலாக் கனிகளில்
களவாய்ப் பழமுண்ணும் மர அணில்களில்
கரவாய்க் காதல் செய்யும் கிளை மறைவுக் கிளிகளில்
எங்கும் மணம் பரப்பும் வண்ண மலர்களில்
இங்கும் அங்கும் உலவும் வன மான்களில்
அழகாடை தரித்தாடும் வண்ண மயில்களில்
நீலம் கரைத்து அழகு பெருக்கும் கடல்களில்
உலகம் சுற்றி உவகை கொள்ளும் அதன் மீன்களில்
ஆஹா! எத்தனை அழகு எண்ணிலா அழகு
என்னிதயம் கவர்ந்த இயற்கை அழகு சொல்ல
வார்த்தை யின்றித் தவிக்குதே என் கவி மனது
ஆக்கம்
அஷ்ரப் அலி

