காதலிக்க கற்றுக்கொள்
நீ எனது அடிமை என கூறுகிறாய்
அனால் நான் விரும்பியது ஒரு அடிமையை இல்லை - மாறாக
கவலைகளை எனதருகில் வர விடாத என் தந்தையை போலவும்
ஆபத்தை அண்ட விடாத ஒரு தமையனை போலவும்
என்னை மனதளவிலும் காயப்படுத்தாத நல்ல ஒரு காதலனாகவும்
சோகமான நேரத்திலும் கூட என்னை சிரிக்க வைக்கும் ஒரு நல்ல நண்பனாகவும் நீ இருக்க வேண்டும் என்றல்லவா ஆசை படுகிறேன்
அனால் நீயோ அடிமை என்கிறாய்
அடிமை படுத்தி வாழ்வதல்ல வாழ்க்கை மாறாக இன்ப துன்பத்தை பகிர்ந்து வாழ்வதல்லவா வாழ்க்கை
இதை நீ உணர்ந்திருந்தால் அடிமை எனும் வார்த்தையை பயன்படுத்தி இருக்க மாடாய்
காதலிக்க கற்றுக்கொள் என் அன்பே
அதுவே வாழ்க்கை வாழ்வதற்கான அர்த்தம் ஆகிவிடும்

