கல்விக்கு எல்லை இல்லை

திருச்சி மாவட்டம் வரகனேரி எனும் பகுதியில் மிராஸ்தார் பாபுராஜ் பிள்ளை அம்மனி அம்மா தம்பதியருக்கு மகனாக 1924 ஆம் ஆண்டு பிறந்தார் செல்வதுரை.

நான்காம் வகுப்பு வரை திருச்சியில் படித்த இவர் தாய் மாமன்கள் அழைப்பை ஏற்று மியன்மருக்கு (பர்மா) சென்ற இவர் 10 வகுப்பு வரை மியன்மர் தலைநகர் ரங்கூன் நகரில் ஆங்கில பள்ளியில் படித்தார்.

1942 நடந்த இரண்டாம் உலக போரில் ஜப்பான் பர்மாவை தக்கிய போது மிண்டும் நாடு திரும்பினர்.

1947 ஆம் ஆண்டு திருச்சி புனித வளனார் கல்லூரியில் தனது இளங்கலை கணித பட்டபடிப்பை முடித்தார் .

1948-49 ஆம் ஆண்டு சென்னையில் ஐரோப்பியர்கள் நடத்திய ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் தனது ஆசிரியர் பயிற்சிப்படிப்பை முடித்தார்.

1949 ஆம் ஆண்டு கரூர் மாநகரில் புகழ்பெற்ற வரலாற்று தொன்மை வாய்ந்த கரூர் நகராட்சி உயர் நிலைப் பள்ளியில் பணியில் சேர்ந்தார்.

சிறப்பாக பணியாற்றிய அவர் 1972 ஆம் ஆண்டு பதவி உயர்வு பெற்று தலைமை ஆசிரியராக பொறுப்பேற்றார். அவர் பணியை பாரட்டி 1973 ஆம் ஆண்டு தமிழக அரசின் டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது அன்றைய தமிழக ஆளுநர் கே.கே.ஷா அவரகளால் வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டது.

1978 ஆம் ஆண்டு மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. 1958 ஆம் ஆண்டு முதல் 1983 வரை 25 ஆண்டுகள் பள்ளியோடு இணைந்த சிதம்பரம் மாணவர்கள் விடுதியின் காப்பாளராக இருந்தார்.

அப்போது மாணவர்களுக்கு நேர மேலாண்மை, தலைமைப் பண்பு, சகிப்பு தன்மை, நாட்டுபற்று மற்றும் எண்ணற்ற குனநலன்களை வளர்த்ததோடு விடுதி நிர்வாகத்தில் மாணவர்கள் பங்கு, இவருடைய சாதனையின் மைல்கல் ஜனநாயக முறைபடி விடுதியில் மாணவர் தேர்தல் நடத்தி உணவுக்குழுக்களை ஏற்படுத்தி ஒளிவு மறைவின்றி விடுதி நிர்வாகத்தை நடத்தியது யாராலும் மறக்க முடியாது.

1983 ஆம் ஆண்டு ஆசிரியர் பணியில் இருந்து ஓய்வு பெற்ற இவர். அப்போது இவரிடம் படித்த மாணவர்களால் தொடங்கப்பட்ட சேரன் கல்விக்குழுமத்தில் மாணவர்களின் வேண்டுகோளுக்கிணங்க கவுரவ கல்வி நெறியாளராக பணியை தொடங்கி இன்று வரை நீடித்து வருகிறார்.

கணித பட்டபடிப்பை இவர் படித்திருந்தாலும். ஆங்கில இலக்கியத்தையும் இலக்கணத்திலும் இவர் ஆற்றிய உரைகள் தான் இக்கால ஆசிரியர்களை ஊக்குவித்து கால்வியாளர்களில் ஓர் உதரணமாக திகழ்ந்து வருகிறார்.

இவருடைய மாணவர்கள் பலர் ஐஏஎஸ், ஐபிஎஸ், அதிகாரிகளாக உள்ளனர்.

நீதி துறையில் பலர் புகழ் பெற்ற வழக்கறிஞர்களாகவும் உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாகவும் இருக்கின்றனர்.

94 வயதிலும் வீட்டில் படித்தும் கொண்டும் ,எழுதி கொண்டும் இருக்கிறார் தினமும் பள்ளிக்கு சென்று மாணவர்களுக்கும் , ஆசிரியர்களும் பாடம் நடத்தி வருகிறார்.

தங்கள் பிள்ளைகள் வெளி ஊர்களில் இருந்தாலும் 86 வயதாகும் இவர் துணைவியார் சாரோஜினி அவர்கள் இவருக்கு உறுதுணையாக இருந்து வருகிறார்.

எழுதியவர் : (28-Feb-18, 6:08 pm)
சேர்த்தது : ராஜ்குமார்
பார்வை : 9848

மேலே