கல்வெட்டு காதல்

என் காதலை
கல்வெட்டுக்களில்
எழுதிவைக்க
நான் அரசாளும்
ராஜனல்ல
ஆனாலும்
நீ என் மனசாலும் ராணி
ஆகவே என் காதலை
நான் இதயவெட்டுக்களில்
எழுதியிருக்கிறேன்
என் உயிருள்ளவரை
அது மாறாது மறையாது...

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ்... (1-Mar-18, 9:31 am)
Tanglish : kalvettu kaadhal
பார்வை : 319

மேலே