கடல் கண்ட காடு

கேள்...
எனது அறை எங்கும்
ததும்பியது கடல்.
நேற்று முன்னிரவில்
தருணமற்ற வாள்வீச்சில்
உன் முயக்கம்
கேளாத பாடலின்
சொற்கவ்வி நெளிய...
கலைதலும் பிணைதலுமாய்
உயிர்சொடுக்கில் வழிந்த
திரவியச்சாயம் உன்
கொலுசு நனைத்து
கடல் என ஆனது.
வியர்த்த புலன்கள்
அறையெங்கும் தவழ
விரல்களோ இன்னும்
ஒற்றியபடி...

எழுதியவர் : ஸ்பரிசன் (1-Mar-18, 3:57 pm)
சேர்த்தது : ஸ்பரிசன்
Tanglish : kadal kanda kaadu
பார்வை : 2602

மேலே