என்னவள் அழகு

என்னவள் முகத்தைப் பார்த்ததாலோ
நிலவு தன் முகத்தை மேகத்தின் பின்னே
சென்று மறைத்துக்கொண்டதோ
என்னவள் ஒய்யார நடையைக் கண்டு
அன்னமும் நடப்பதை மறந்து
நீரில் சென்று நீந்த போயிற்றோ
மூடிய வானம் காரிருள் மேகம் தாங்க
தோகையை விரித்து ஆடவந்த மயில்
இவள் ஆடி அசைந்து வருவதைக் கண்டு
தோகை விரிக்க மறந்ததோ , ஏன் பின்னே
ஆடவில்லை நடனம் அந்த மயில்
முன்னிரவில் தடடகத்தின் கரையில்
பெண்ணவள் முகத்தின் ஒளியைக் கண்டு
மதியென மயங்கியதோ அல்லி -அங்கு
மதியின் வருகைக்கு முன்னே பின்
அலர்ந்ததேனோ இரவில் .................
இன்னும் இன்னும் சொல்ல எத்தனையோ
எத்தனையோ என்னவள் எழில் கூர்ந்து
இத்துடன் போதும் இப்போதைக்கு என்று
நினைத்தது என் மனமும் இல்லை எனில்
திருஷ்டி தாக்கிவிட்டால் என் செய்வதென்று
மனமும் சொல்ல !

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (1-Mar-18, 3:51 pm)
Tanglish : ennaval alagu
பார்வை : 282

மேலே