காதல் வரும் நேரம்💟

விடை தெரியா கேள்விகள் உலகில் உண்டு ஏராளம்,முயன்றால் விடை
கிடைக்கலாம்,
நடை பயிலும் குழந்தை கூட வினவும் வினாக்களை,
தடையின்றி பதிலுரைக்க முடியாது தவித்தாலும்,
ஏதேனும் பதிலாய் தந்து உரைக்கலாம்,
ஆனால் இந்த காதல் என்பது எப்போது வரும்?எப்படி வரும்?
எதனால் வரும்?எவர்க்கு வரும்?
எங்கிருந்து வரும்? அதன் வண்ணமென்ன?எண்ணமென்ன?
திண்ணமாய் கூற முடியாது யாராலும். காத்திருக்கிறேன்,
காதல் வரும் நேரம் பார்த்து💟💟

எழுதியவர் : பாலமுருகன்பாபு (1-Mar-18, 2:13 pm)
சேர்த்தது : BABUSHOBHA
பார்வை : 236

மேலே