என் ஏழாவது காதல்
நாம் பிரிந்தோம்
வேறொன்றுமில்லை.
வெறும் நினைவுகள்
பெருங்காதல் அல்ல.
தனித்தும் இணைந்து
இணைந்தும் பிரிந்து
சொல்லற்று இருந்தோம்.
நம் பகிர்தல்கள்
இயல்பானது பூ
பூப்பது போல்.
நம் காதலை
நிறுவிய நிர்பந்தம்
கொடுக்கென தெரிந்தபின்
விலகியது மட்டுமே
நாம் காதலை
நேர்மையாய் புரிந்து
கொண்டதின் சாட்சி.